தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜூன். தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்தாலும் புஷ்பா படம் மூலம் பேன் இண்டியா நடிகராக பிரபலமானவர் இவர். சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா திரைப்படம் ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தும் கும்பலை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.
இந்த படம் எல்லா மொழியிலும் ஹிட் அடிக்கவே புஷ்பா 2 படத்தை எடுத்தார்கள். அதற்கே 3 வருடங்கள் ஆகிவிட்டது. அதேநேரம், அப்படி தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் வெளியான புஷ்பா 2 படம் 1800 கோடி வசூலை செய்து சாதனை படைத்தது. இந்த படத்திற்கு பின் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பதாக ஒரு புதிய படம் அறிவிக்கப்பட்டது.

உலக தரத்தில் உருவாகும் இந்த படம் 800 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. மேலும், இந்த படத்தின் கதை, திரைக்கதையில் ஹாலிவுட் எழுத்தாளர்களும் பங்கேற்றிருக்கிறார்கள். மேலும், இந்த படத்தில் ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்றி வருகிறார்கள். இந்த படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால், அந்த செய்தியில் உண்மையில்லை என்பது தெரியவந்திருக்கிறது. புஷ்பா 2 பாகங்களை எடுப்பதற்கு 5 வருடம் ஆகிவிட்டது. எனவே, அந்த தப்பை மீண்டும் செய்ய மாட்டேன். ஒரே பாகத்தில் முடித்துவிடுங்கள் என அட்லியிடம் கறாராக சொல்லிவிட்டாராம் அல்லு அர்ஜூன்.
