சகாப்தம் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நடிகராக களமிறறங்கியவர் சண்முக பாண்டியன். நடிகர் விஜயகாந்தின் மகன்களில் ஒருவர். அப்பாவை போலவே நடிகராக வேண்டும் என்கிற ஆசையில் சினிமாவுக்கு வந்தவர் இவர். சகாப்தம் படத்திற்கு பின் சில படங்களில் நடித்தார்.
ஆனால் ஒன்றும் ஹிட் அடிக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்பு கூட படைத்தலைவன் என்கிற படம் வெளியானது. இந்த படத்தில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருந்தார் சண்முக பாண்டியன். ஆனால் இந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில்தான், பொன்ராம் இயக்கத்தில் சரத்குமாருடன் இணைந்து சண்முக பாண்டியன் நடித்துள்ள கொம்பு சீவி திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதுவரை இப்படம் லட்சத்திற்கும் மேல் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. சண்முக பாண்டியன் முந்தைய படங்களை ஒப்பிடும்போது இந்த படம் நல்ல வசூலையும் பெற்று வருகிறது. கண்டிப்பாக கொம்பு சீவி திரைப்படம் சண்முக பாண்டியனுக்கு ஒரு ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்த சண்முகம் பாண்டியன் ‘அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு உண்டு.. ஆனால் அப்பாவின் வாழ்க்கை வரலாற்றை எளிதாக படமாக்க முடியாது. அதற்கு சரியான இயக்குனர் கிடைத்தால் நிச்சயம் அப்பாவின் கதாபாத்திரத்தில் நான் நடிப்பேன்’ என்று சொல்லி இருக்கிறார் சண்முக பாண்டியன்.
