கோலிவுட்டில் எப்படி ரஜினி சூப்பர் ஸ்டாராக மக்கள் மத்தியில் அறியப்படுகிறாரோ அதை போல கன்னட சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக அறியப்படுபவர் நடிகர் சிவராஜ்குமார். அவருடைய குடும்பமே ஒரு பாரம்பரிய குடும்பமாக கன்னட சினிமா உலகில் அறியப்படுகிறது. அவருடைய அப்பா ராஜ்குமாருக்கு கன்னட சினிமா உலகில் இன்று வரை மதிப்பும் மரியாதையும் இருந்து வருகிறது.
அந்த வகையில் சிவராஜ்குமாரையும் ஒட்டுமொத்த கன்னட சினிமாவும் நல்ல முறையில் பார்த்து வருகின்றனர். அதற்கேற்ப சிவராஜ்குமாரும் ரசிகர்களிடம் பழகும் விதம் பேசும் விதம் என மிக எளிதாக கனெக்ட் ஆகிவிடுகிறார். கன்னடம் மட்டுமில்லாமல் பிற மொழிகளிலும் சிவராஜ்குமார் நடித்து வருகிறார். குறிப்பாக ஜெயிலர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்ததன் மூலம் அந்தப் படத்தின் வெற்றிக்கும் சிவராஜ்குமார் ஒரு வகையில் காரணமானார்.
ஹிந்தி படங்களுடன் போட்டி போடும் நோக்கத்துடன் பேன் இந்தியா என்ற கலாச்சாரம் தென் இந்திய சினிமாவில் வந்தது. ஒரு பெரிய நடிகரின் படம் என்றால் அந்த படத்தில் மற்ற மொழிகளில் இருக்கும் சூப்பர் ஸ்டார்களையும் நடிக்க வைத்து வியாபாரத்தை பெருக்கி வருகின்றனர். அந்த வகையில் ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றி பெற்றதற்கு காரணம் சிவராஜ்குமார், மோகன்லால் என பெரிய பெரிய நடிகர்கள் நடித்ததனால்தான்.

இப்படி இருக்கும் சூழ் நிலையில் ஏன் இங்குள்ள நடிகர்கள் மட்டும் வேறு மொழிகளில் கேமியோ ரோலுக்கு நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை என்ற கேள்வி சிவராஜ்குமார் முன்பு வைக்கப்பட்டது. அதற்கு சிவராஜ்குமார் அப்படியெல்லாம் இல்லையே. ஏன் பிரபுதேவா நடித்தார், சிவகார்த்திகேயனும் நடித்தார். இனிமேல் அப்படி இருக்காது. சீக்கிரமாக நடிப்பார்கள்.
அப்படி ஒரு விஷயம் நடக்க போகிறது. என் படத்திலேயே அது நடக்கும். ஆனால் இப்போது சொல்ல முடியாது. எல்லாம் நல்லபடியாக முடியட்டும். அதன் பிறகு சொல்கிறேன் என சிவராஜ்குமார் கூறினார். இவர் சொல்வதை பார்க்கும் போது இவர் நடிக்கும் படத்தில் கேமியோ ரோலில் தமிழில் இருந்து ஒரு பெரிய நடிகர் நடிக்க போகிறார் என்பது மட்டும் தெரிகிறது.
