Bharathiraja: பணமின்றி தவிக்கிறாரா பாரதிராஜா? தனுஷ் செய்த உதவி

Published on: December 23, 2025
bharathi
---Advertisement---

தமிழ் சினிமாவில் தன்னுடைய படங்களின் மூலம் ஒரு புதிய தாக்கத்தை கொண்டு வந்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. என் பாசத்திற்குரிய தமிழ் மக்களே என தன்னுடைய ஒவ்வொரு படைப்பிலும் வித்தியாசமான அணுகுமுறையை கொண்டு வந்தார். இவரால் அறிமுகமான பல ஹீரோயின்கள் 80கள் காலகட்டத்தில் உச்சத்தை அடைந்தனர். ராதிகா, ராதா,ரேகா என அடுக்கிக் கொண்டே போகலாம்.

அதுமட்டுமில்லாமல் தான் அறிமுகப்படுத்தும் எந்த ஹீரோயின்களாக இருந்தாலும் முதலில் அவர்களின் பெயர்களை மாற்றுவது பாரதிராஜாவின் வழக்கமாக இருந்தது. குறிப்பாக ஹீரோயின்களின் பெயர்களை ர வரிசையிலேயேதான் வைப்பார். எண்ணற்ற வெற்றிப்படங்களை கொடுத்தவர், கிழக்கே போகும் ரயில், முதல் மரியாதை, சிகப்பு ரோஜாக்கள், 16 வாதினிலே, கருத்தம்மா, போன்ற எண்ணற்ற படங்களை கூறலாம்.

கிராமிய வாழ்க்கையை எதார்த்தமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சித்தரிப்பதில் பாரதிராஜா மிகவும் பெயர் பெற்றவர். சமீபத்தில்தான் இவருடைய ஒரே மகனான மனோஜ் பாரதிராஜா காலமானார். அதிலிருந்தே பாரதிராஜா மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார் என்று கூறப்பட்டது. அதற்கு முன்பே அவர் தள்ளாடிதான் நடக்க ஆரம்பித்தார். தன் மகன் இறப்பிற்கு பின் அவருடைய உடல் நிலை மோசமானதான வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார்.

அவருக்கு ஒரு மகளும் இருக்கிறாராம். அவர் மலேசியாவில் வசித்து வருகிறாராம். வீட்டில் மனைவி இருந்தாலும் தனிமையில் இருப்பதாக அந்தணன் கூறினார். மேலும் வயதானவர்கள் வீட்டில் இருக்கும் போது அவர்களுடன் ஆறுதலாக பேசினாலே கையில் வைத்திருக்கும் ரூபாயை கொடுப்பார்கள். அப்படி பாரதிராஜா கொடுத்துவிடுவார் என்று நினைத்து அவரிடம் காசை கொடுப்பதே இல்லையாம்.

அதனால் தனக்கு தெரிந்தவர்களிடம் பாரதிராஜா காசு கேட்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் நேரடியாக அவர் கேட்கவில்லையாம். அவர் போனில் இருந்து குறுஞ்செய்தி மட்டும் போவதாக அந்தணன் கூறியிருக்கிறார். அப்படி தனுஷுக்கும் ஒரு செய்தி போக தனுஷ் பாரதிராஜாவுக்கு உதவி செய்ததாக அந்தணன் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.