பொதுவாகவே ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை புதிய திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாகும். அதே நேரம் பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் சில சமயம் வியாழக்கிழமையே கூட ரிலீஸ் செய்து விடுகிறார்கள். குறிப்பாக ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படங்கள் வியாழக்கிழமைகளில் வெளியாவதுண்டு.
இந்த வாரத்தை பொருத்தவரை வருகிற 25-ம் தேதி கிறிஸ்துவர்களின் பண்டிகையான கிறிஸ்மஸ் வருகிறது. எனவே அன்று என்னென்ன திரைப்படங்கள் வெளியாகிறது என பார்ப்போம்.
இந்த வார ரிலீஸில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம்தான் சிறை. இந்த படத்தில் அக்ஷய் குமார் என்கிற புதுமுக நடிகர் ஹீரோவாகவும், முக்கிய இடத்தில் விக்ரம் பிரபுவும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த எல்லோருமே படம் சிறப்பாக இருப்பதாக பாராட்டி வருகிறார்கள்.
2025ம் ஆண்டில் இது மிகச் சிறந்த படமாக சிறை இருக்கும் எனவும் விமர்சகர்கள் சொல்வதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த படத்தை வெற்றிமாறனின் உதவியாளர் சுரேஷ் இயக்கியுள்ளார். அடுத்து அருண் விஜயின் ரெட்ட தல திரைப்படம் வருகிற 25ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் சித்தி இட்னானி, தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வருகிற 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும், சோனியா அகர்வால் நடித்த பருத்தி மற்றும் ரகசிய சினேகிதனே ஆகிய படங்களும் வருகிற 26ம் தேதி ரீலீஸாகவுள்ளது.
