2025ல் அறிமுகம் ஆன ஹீரோயின்ஸ்…டாப் கியரில் கயாடு

Published on: December 23, 2025
2025 tamil heroins
---Advertisement---

2025ல் தமிழ் கிட்டத்தட்ட 150 படங்கள் வரை வெளியாகியுள்ளன. அதில் பல படங்கலில் முன்னணி நாயகிகள் நடித்திருந்தனர். சில் படங்களில் புதுமுகங்கள் அறிமுகம் ஆகியிருந்தனர். இந்த ஆண்டு பல புது முகங்கள் வந்தாலும் குறிப்பிட்ட சிலரே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளனர்.அவர்களை பற்றி இங்கே காணலாம்.

கயாடு லோஹர்:

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்த படம் டிராகன். இப்படத்தில் அறிமுகம் ஆனவ் கயாடு லோஹர். கன்னடத்தில் இபர் ஏற்கெனவே அறிமுகம் ஆகியிருந்தாலு தமிழில் இதுதான் அவருக்கு முதல் படம். இப்படம் மூலம் இவர் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தார். சமூக வலைதளங்களில் இவரை கொண்டாடித்தீர்த்தனர். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

ருக்மணி வசந்த்:

இவரும் தமிழில் நம்பிக்கைகுரிய நட்சத்திரமாக உருவாகியுள்ளார். கன்னடத்தில் சில படங்களில் இவர் நடித்திருந்தாலும் விஜய்சேதுயுடன் ஏஸ் படத்தில் தமிழில் அறிமுகம் ஆனார். ஆனால் ஏஸ் படு தோல்வி அடைந்தது. அடுத்து சிவகார்த்திகேயனுடன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்திருந்தார்.காந்தாரா 2 இவரது நடிப்பில் வந்த சூப்பர்ஹிட் படமாகும்.

கீர்த்தி ஷெட்டி:

தெலுங்கி கீர்த்தி ஷெட்டி முன்னணி நடிகையாக இருந்தாலும் தம்ழில் அவ்ர் அறிமுகம் ஆகும் படம் வா வாத்தியார். கார்த்தி நடிப்பில் வெளியாக உள்ள இந்த படத்தில் இஅவ்ரது கேரக்டர் நன்றாக வந்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் படம் வெளியாகும்முன்பே அடுத்த படமாக நயன்தாரா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி நடித்து வெளிவர உள்ள படம் எல்.ஐ.கே. அனிருத் இசையில் சமீபத்தில் வந்த பாடல் ஒன்று வைரலானது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலீலா:

ஸ்ரீலீலா தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தாலும் தமிழில் சிவகார்த்திகேயனுடன் பராசக்தி படத்தில் அறிமுகம் ஆகிறார். தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிட்சயமான இவரது நடனம் பராசக்தியிலும் இடம்பெற்றுள்ளது சமீபத்தில் வந்த பாடல் மூலம் தெரிகிறது.

மிதிலா பால்கர்:

இந்தி மற்றும் மராத்தி படங்களில் பிரபலமான இவர் தமிழில் ஓகே எந்தன் பேபி படம் மூலம் அறிமுகம் ஆனார். விஷ்ணு விஷால் தயாரிப்பில் அவரது தம்பி நாயகனாக அறிமுகமானார். ஆனால் இப்பட்ம் எதிர்பார்த்த அள்வில் வெற்றி பெறவில்லை.

அஞ்சலி சிவராமன்:

பேர்ட் கேள் படம் மூலம் அறிமுகம் ஆனவர் அஞ்சலி சிவராமன். முதல் படத்திலேயே அவரது நடிப்பு அனைவராலும் பாரட்டப்படட்து.

சைத்ரா அசார் :

இந்தி படங்களில் இவர் நடித்திருந்தாலும் தமிழில் 3 படம் மூலம் அறிமுகம் ஆனார்.

adminram

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.