தமிழ் சினிமாவை பொருத்தவரை 2025ம் வருடம் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியானது. இந்த வருடங்கள் சில பெரிய நடிகர்களின் படங்கள் ரசிகர்களை ஏமாற்றியது. 2025 ஆம் வருடம் லாபகரமாக அமையவில்லை என விநியோகஸ்தர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் கூறியிருக்கிறார். வழக்கம் போல இந்த வருடமும் மிகவும் குறைவான நல்ல படங்களே வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் 2025ம் வருடம் நல்ல கதை அம்சத்தோடு உருவாகி ரசிகர்களின் பாராட்டை பெற்ற 5 திரைப்படங்கள் பற்றி பார்ப்போம்
அறிமுக இயக்குனர் இளைஞர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் டூரிஸ்ட் ஃபேமிலி. மனிதர்களின் உறவுகளுக்கிடையே இருக்கும் மகத்துவம், மனிதாபிமானம், உறவுகளின் மேன்மை, மனித நேயம் ஆகியவற்றை பற்றி இந்த படம் பேசியிருந்தது.

கோலிவுட்டில் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து வரும் மணிகண்டன் நடித்து வெளியான திரைப்படம்தான் குடும்பஸ்தன். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒரு இளைஞன் வாழ்வில் முன்னேற என்னவெல்லாம் செய்கிறான்.. அதற்கு என்னவெல்லாம் தடையாக இருக்கிறது? அதனால் குடும்பத்தில் வரும் பிரச்சனைகள் என்ன என்பதை இந்த படம் வெளிச்சம் போட்டு காட்டியது.
தெலுங்கு பட இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தானா உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான திரைப்படம்தான் குபேரா. ஒரு பெரிய பணக்காரன் பணத்திற்காக சில பிச்சைக்காரர்களை போலியாக நடிக்க வைத்து சில விஷயங்கள் செய்ய அது எதில் முடிகிறது என்பதை இந்த படம் பேசியிருந்தது. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெளியான படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

அடுத்து வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக வேலை செய்த சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம் வருகிற 25ம் தேதி வெளியாகிறது. விசாரணை கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் பின்னணி.. அதில் காவல்துறை அதிகாரிகள் சந்திக்கும் பிரச்சனைகள்.. விசாரணை கைதிகள் என்கிற பெயரில் நீதிமன்றங்கள் எப்படி பலரையும் அலைக்கழிக்கிறது போன்ற பல முக்கிய விஷயங்களை இந்த படம் பேசியிருக்கிறது.
இந்த படம் இன்னும் தியேட்டரில் வெளியாகவில்லை என்றாலும் சிறப்பு காட்சியை பார்த்தவர்கள் கூறிய விமர்சனங்களை பார்க்கும்போது 2025ம் ஆண்டில் வெளியான மிகச்சிறந்த படங்களில் சிறை இடம் பெறும் என்று கணிக்கப்படுகிறது.
