தமிழ் சினிமாவில் அப்போதும் இப்போதும் எப்போதும் உச்ச நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பாலச்சந்தரின் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமாகி அதன்பின் கமல் நடிக்கும் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிக்க துவங்கி உச்சத்தை தொட்டவர்தான் ரஜினிகாந்த்.
தனக்கென ஒரு தனி ஸ்டைல், தனி பாணியை உருவாக்கி ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தையும் ரஜினி உருவாக்கி இருக்கிறார். ரஜினி சினிமாவிற்கு வந்து 50 வருடங்கள் ஆகிவிட்டது. தற்போது 75 வயதாகியும் இன்னும் ஆக்டிவாக சினிமாவில் நடித்து வருகிறார். அதுவும் ஹீரோவாக..
ஒருபக்கம் ரஜினி பற்றி பல கிசுகிசுகளும் பல வருடங்களாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவை எவற்றிற்கும் ஆதாரம் இல்லை.. ஆனாலும் அந்த கிசுகிசுக்களை பலரும் நம்புகிறார்கள்.
அப்படி வந்த கிசுகிசுகளில் ஒன்றுதான் எம்ஜிஆருடன் சில படங்களில் நடித்த நடிகை லதாவுக்கும் ரஜினிக்கும் இடையே காதல் இருந்தது.. இதனால் கோபப்பட்டு எம்ஜிஆர் ரஜினியை நேரில் அழைத்து கண்டித்தார் என பல வருடங்களாக சொல்லி வருகிறார்கள். இப்போதும் கூட ரஜினியை பிடிக்காத சிலர் சமூக வலைதளங்களில் இதை பதிவிடுகிறார்கள்.

ஆனால் இதை மறுத்திருக்கிறார் நடிகை லதா. நான், விஜயகுமார், ரஜினி ஆகிய மூவரும் ஆயிரம் ஜென்மங்கள் என்கிற படத்தில் ஒன்றாக நடித்தோம். ஷூட்டிங்கில் எல்லோரும் ஜாலியாக பேசிக் கொண்டிருப்போம். நாங்க மூணு பேரும் ஒன்றாக பழனி முருகன் கோவிலுக்கு சென்று வந்தோம். அதைத்தான் பெரிய விஷயமாக மாற்றி விட்டார்கள்..நல்லவேளையாக இப்போது இருப்பது போல அப்போது youtube எல்லாம் இல்லை. அதனால் கிசுகிசுவோடு நிறுத்தி விட்டார்கள்.
இதுவே இந்த காலமாக இருந்திருந்தால் என்னென்னவோ செய்திருப்பார்கள். அதை எல்லாம் கடந்து வந்தாச்சி.. இப்ப நாங்க நல்ல குடும்ப நண்பர்களாக இருக்கிறோம். எம்ஜிஆருக்கு பின் தலைக்கணம் இல்லாத ஒரு நடிகர் என்றால் அது ரஜினிதான்’ என்று சொல்லி இருக்கிறார் லதா.
