10 வருடங்களுக்கு முன்பே சகாப்தம் என்கிற திரைப்படம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சண்முக பாண்டியன். புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் இவர். மூத்த மகன் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில் இளைய மகன் சினிமாவுக்கு வந்திருக்கிறார்.
சகாப்தம் திரைப்படத்திற்கு பின் மதுர வீரன் படைத்தலைவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் எதிர்பாத வெற்றியை பெறவில்லை.
தற்போது சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற ஹிட் படங்களை கொடுத்த பொன்ராம் இயக்கத்தில் கொம்பு சீவி என்கிற படத்தில் நடித்தார். இந்த படத்தில் சண்முக பாண்டியனோடு இணைந்து சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. படம் வெளியான முதல் காட்சியிலிருந்தே இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தது.
நல்ல ஒரு அழகான கிராமத்து ஆக்சன், காமெடி கலந்த காதல் திரைப்படம்.. கண்டிப்பாக இந்த படம் சண்முக பாண்டியனுக்கு சூப்பர் ஹிட் என்று பலரும் சொன்னார்கள். மேலும் படத்தில் வரும் காமெடி காட்சிகளும் நன்றாக இருப்பதாக பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டார்கள்.
எனவே கொம்பு சீவி திரைப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. இந்நிலையில் படம் வெளியாகிய 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் தமிழ்நாட்டில் 1.26 கோடி வசூல் செய்திருக்கிறது. வெளிநாட்டு வசூலையும் சேர்த்தால் மொத்தமாக இப்படம் 1.5 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
