நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் சிக்மா திரைப்படமும் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். லைக்கா தயாரிப்பில் அவர் இயக்கியுள்ள இந்த படத்தில் தெலுங்கு நடிகர் சந்திப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும் சம்பத், நடன இயக்குனர் ராஜி சுந்தரம் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.
ஜேசன் சஞ்சய் அப்பா விஜயை போல நடிகராகத்தான் வருவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். இன்னும் சொல்லப்போனால் அவரை வைத்து படமெடுக்க திரையுலகில் உள்ள பலரும் முயற்சியும் செய்தார்கள். ஆனால் எனக்கு நடிப்பதில் ஆர்வமில்லை என கறாராக மறுத்துவிட்டார் ஜேசன். ஏனெனில் அவருக்கு இயக்குனராகும் ஆசையே அதிகமாக இருந்தது.

ஒரு வருடத்திற்கு முன்பு லைக்கா தயாரிப்பில் அவர் இயக்குனராக அறிமுகமாகிறார் என்கிற செய்தி வெளியானபோது பலரையும் அது ஆச்சரியப்படுத்தியது. ஒரு திரைப்படத்தை இயக்கும் அளவுக்கு அனுபவமும், சினிமா அறிவும் ஜேசனுக்கு இருக்குமா? என்கிற சந்தேகம் பலருக்கும் எழுந்தது. ஆனால் அந்த சந்தேகத்தையெல்லாம் உடைத்து தற்போது சிக்மா படத்தை சிறப்பாக எடுத்து முடித்து விட்டார் ஜேசன். சமீபத்தில் இந்த புரமோ வீடியோவும் வெளியானது.
யுடியூப்பில் இந்த வீடியோ பல மில்லியன் வியூஸ் போயிருக்கிறது. இந்நிலையில் சிக்மா படத்தை முழுவதுமாக பார்த்த லைக்காவுக்கு படம் மிகவும் பிடித்துப்போக ஜேசனை பாராட்டியதோடு மீண்டும் நமது தயாரிப்பில் நீங்கள் ஒரு படத்தை இயக்குங்கள் என்றும் சொல்லியிருக்கிறதாம். அனேகமாக ஜேசன் சஞ்சய் இயக்கும் அடுத்த படத்தையும் லைக்கா நிறுவனமே தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
