
Cinema News
Ilaiyaraja: எனக்கு வருத்தம்தான்! 50வது விழா நடந்தும் இளையராஜாவுக்கு இது போதாதா?
Ilaiyaraja: நேற்றைய தினம் தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில் எனக்கு பேச்சு வரவில்லை. அந்தளவுக்கு மிகுந்த சந்தோஷத்தில் இருந்தேன். உள்ளத்தில் நினைப்பதெல்லாம் வெளியில் வார்த்தையாக வருவது என்பது அந்தந்த நேரத்தை பொருத்தும் சூழ்நிலையை பொறுத்தும் அமைவது. ஆனால் நேற்று என்னவோ என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவ்வளவு ஆனந்தம். ஒரு பாராட்டு விழாவை இவ்வளவு சிறப்பாக ஒரு அரசு ஒரு முதல்வர் இந்த அளவு முனைப்பெடுத்து அரசு சார்ந்த அமைச்சர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து இந்த விழாவை சிறப்பாக்கியது என்னால் நம்பவே முடியவில்லை.
அதனால் தான் எனக்கு பேச்சே வரவில்லை. நான் கூட முதல்வரிடம் எதுக்காக எனக்கு இதை செய்கிறீர்கள் என கேட்டேன். அதை பல பேர் பலவிதமாக நினைக்கலாம். இவ்வளவு அன்பு செலுத்துவதற்கு நான் என்ன செய்தேன். அதற்கு நான் போட்ட இசையாக இருக்கலாம். அதை அவர் தான் சொல்ல முடியும். நான் இதையெல்லாம் எதிர்பார்க்கிறவன் அல்ல .அப்படிப்பட்ட ஒருவனுக்கு பாராட்டு விழா நடத்துவது என்பது இந்த சிம்பொனியின் சிகரம் தொட்டதனால்தான் அந்தப் பாராட்டு விழாவை அதை மிகவும் முக்கியமாக கருதி இருக்கிறார் என்பது எனக்கு இப்போது புரிகிறது .
உலக சாதனை படைத்த ஒரு தமிழனை பாராட்டுவது என்பது தமிழக அரசின் கடமை என அவர் கருதி இருக்கிறார் என்று தான் நான் நினைக்கிறேன். முதல்வர் அவர்கள் என்னிடம் சில வேண்டுகோளை வைத்தார். சங்கத்தமிழ் பாடல்களான பதிற்றுப்பத்து பரிபாடல் இந்த நூல்களுக்கும் நான் தான் இசையமைக்க வேண்டும் என கூறினார். அதை நான் நிச்சயமாக செய்வேன்.
அதுபோல தமிழ் திரை உலகில் இரு ஜாம்பவான்களாக இருக்கும் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஆகிய இருவரும் வந்து இந்த விழாவை சிறப்பாக்கியது எனக்கு மிகவும் சந்தோஷம்.இந்த விழாவிற்கு மகுடம் வைத்தாற் போல இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும் நான் இசையமைத்த சிம்பொனியை பற்றியோ அல்லது என்னுடைய 50 வருட திரைத்துறை அனுபவத்தை பற்றியோ சொல்லாதது எனக்கு ஒரு பெரிய விஷயமாக எண்ணுகிறேன்.
ஆனால் அவர்களுடைய ரசிகர்களுக்கு அது சந்தோஷமாக இருந்திருக்கும். பல மேடைகளில் ரஜினி கமல் இருவரும் கூறி இருக்கிறார்கள். அதாவது ரஜினியை விட கமலுக்குத்தான் நான் நல்ல பாடலை கொடுத்திருக்கிறேன் என்றும் கமலை விட ரஜினிக்கு தான் நல்ல பாடல்களை கொடுத்திருக்கிறேன் என்றும் இருவரும் பல மேடைகளில் பேசி இருக்கிறார்கள். ஆனால் இருவருக்கும் நான் சிறப்பான பாடல்களை தான் வழங்கி இருக்கிறேன் என அவர்கள் இருவரும் கூறியது சாட்சி என இளையராஜா தற்போது ஒரு காணொளி மூலம் அவருடைய கருத்துக்களை தற்போது தெரிவித்திருக்கிறார்.