தனுஷ் படத்த விட அதிகம்!.. இமேஜுக்காக பராசக்தியை பில்டப் செய்த SK ஃபேன்ஸ்!..

Published on: December 24, 2025
dhanush
---Advertisement---

சினிமா என்பது போட்டி பொறாமை கொண்ட உலகம். ஒரு நடிகர் மேலே வளர்ந்து விடக்கூடாது என இன்னொரு நடிகர் நினைப்பார். ஆனால் தற்போது இது கொஞ்சம் மாறியிருக்கிறது. அதேநேரம் ரசிகர்களிடம் போட்டி பொறாமை மற்றும் வன்மமும் மிகவும் அதிகரித்திருக்கிறது.

சமூக வலைதளங்களில் அவர்கள் ட்ரோல் செய்வதை பார்த்தால் இது புரியும்.ரஜினி, அஜித் படங்கள் வெளியானால் விஜய் ரசிகர்கள் கடுமையாக ட்ரோல் செய்வார்கள். அதேபோல் விஜய் படம் வெளியானால் அஜித், ரஜினி ரசிகர்கள் ட்ரோல் செய்வார்கள். இது எப்போது முடியும் என தெரியவில்லை.

ஒருபக்கம் தனுசுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் இடையேயும் கோல்ட் வார் போய்க் கொண்டிருக்கிறது. கொஞ்சம் ஃபிளாஷ்பேக் போனால் சினிமாவில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் தனுஷ்தான். அவர் நடித்த 3 படத்தில் சிவகார்த்திகேயனை ஒரு சின்ன வேடத்தில் நடிக்கவைத்தார். அதன்பின்னர் அவரை வைத்து எதிர் நீச்சல், காக்கிச் சட்டை ஆகிய படங்களையும் தயாரித்தார் தனுஷ். ஆனால் ஒரு கட்டத்தில் தனுஷுக்கும், அவருக்கும் இடையே ஏதோ பிரச்சனை ஆகிய இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லாமல் போனது.

இந்நிலையில்தான் தனுஷ் அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ள புதிய படத்தின் ஓடிடி உரிமை 50 கோடி என்றும், பராசக்தி படத்தின் ஓடிடி உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் 52 கோடிக்கு வாங்கி இருப்பதாகவும், தனுஷ் படத்தை விட சிவகார்த்திகேயனுக்கு மார்க்கெட் அதிகம் என்பது போலவும் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் டிவிட்டர் போன்ற சமூகத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.

ஆனால் அது உண்மையில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. அதாவது தனுஷ் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 51 கோடிக்கு வாங்கியிருக்கிறது. அதேநேரம் பராசக்தி இதைவிடவும் பல கோடிகள் குறைவு என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். ஆனால் இமேஜுக்காகவே சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இப்படி தவறான தகவலை பரப்பி வருகிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.