
Box Office
25வது நாளில் கேப்டன் பிரபாகரன்.. மதராஸி வசூல்ல பாதி வந்துருச்சே!…
Captain Prabhakaran: ஆர்.கே செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்தின் நூறாவது திரைப்படமாக 1991ம் வருடம் வெளியான திரைப்படம்தான் கேப்டன் பிரபாகரன். அதிரடி ஆக்சன், அரசியல் கலந்த திரைப்படமாக வெளியாகி வசூலை வாரிக் குவித்தது.
ரஜினி, கமல், பிரபு உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் அவர்களின் நூறாவது படம் ஓடாத நிலையில் விஜயகாந்தின் நூறாவது படமான கேப்டன் பிரபாகரன் அசத்தலான வெற்றியை பெற்றது. இந்த படத்தில் அசத்தலான வசனங்களும் அதிரடி சண்டை காட்சிகளும் இடம் பெற்றிருந்தது இப்போது பல படங்களிலும் காமெடி வில்லனாக கலக்கிக் கொண்டிருக்கும் மன்சூர் அலிகான் கேப்டன் பிரபாகரன் படத்தில்தான் டெரரான வில்லனாக அறிமுகமானார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பல நாட்கள் நடந்தது. கேரளாவை ஒட்டியுள்ள காடுகளில் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நடத்தப்பட்டது. படக்குழு மிகவும் கஷ்டப்பட்டு இப்படத்தை உருவாக்கினார்கள். இளையராஜாவின் இசையில் இரண்டு பாடங்களும் ஹிட் அடித்தது. குறிப்பாக ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது. இந்நிலையில்தான் இந்த படம் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் 4k தொழில்நுட்பத்துடன் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.
துவக்கம் முதலே இந்த படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு இருந்தது. ஒவ்வொரு நாளும் 2 கோடிக்கு மேல் இப்படம் வசூல் செய்து சாதனை படைத்தது. சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் ரிலீஸாகி 6வது நாளில் வசூல் இரண்டு கோடிக்கும் கீழே போனது. ஆனால் கேப்டன் பிரபாகரனோ ரிலீஸ் ஆகி இரண்டாவது வாரத்திலும் தொடர்ந்து தினமும் 2 கோடிக்கு மேல் வசூல் செய்து கெத்து காட்டியது.
தற்போது படம் ரீ-ரிலீஸில் 25 நாள் ஆகிவிட்டதை விஜயகாந்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 25 நாட்களில் இப்படம் 35 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. போன வருடம் விஜயின் கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு 30 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. தற்போது விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரனும் அந்த சாதனையை செய்திருக்கிறது