மாநகரம் படத்தை இயக்கியிருந்தாலும் கைதி திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின் மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறினார். குறிப்பாக இளசுகளுக்கு மிகவும் பிடித்த இயக்குனராக மாறினார் லோகேஷ். ஏனெனில் லோகேஷ் படம் என்றால் அதில் அதிரடி ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
விஜயை வைத்து மாஸ்டர், லியோ ஆகிய படங்களை இயக்கினார். கடைசியாக ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கியிருந்தார்.
கூலி படம் 500 கோடியை வசூல் செய்திருந்தாலும் ரசிகர்களை முழுமையாக திருப்தி செய்யவில்லை. மேலும் ரஜினி, கமல் இருவரையும் வைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் லோகேஷ் இறங்கினார். ஆனால் அது நடக்கவில்லை. எனவே லோகேஷ் அடுத்து யாரை வைத்து படம் இயக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இந்நிலையில்தான் அடுத்து அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை அவர் இயக்கப் போகிறார். பல வருடங்களுக்கு முன்பு லோகேஷ் கனகராஜ் எழுதிய இரும்புக்கை மாயாவி கதையைத்தான் படமாக எடுக்கப் போகிறார் என்கிற செய்தி இரண்டு நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆனால் அது உண்மையில்லை என்பது தெரியவந்திருக்கிறது. லோகேஷ் கனகராஜும், அல்லு அர்ஜூனும் ஒரு புதிய படத்தில் இணையப்போவது உண்மைதான் என்றாலும் அது இரும்பு கை மாயாவி இல்லை என்கிறார்கள். ஏனெனில் அந்த கதையில் லோகேஷ் எழுதிய சில காட்சிகள் சில படங்களில் வந்துவிட்டதாம். மேலும், அதே கதையை ஒட்டி வேறு ஒரு திரைப்படமும் வந்து விட்டதால் அந்த கதையை மூலையில் தூக்கி போட்டு விட்டாராம் லோகேஷ். எனவே அல்லு அர்ஜுனை வைத்து லோகேஷ் இயக்கப்போவது வேறு கதை என்கிறார்கள்.
கடந்த பல வருடங்களாகவே லோகேஷின் இயகக்த்தில் நடிக்க அல்லு அர்ஜூன் ஆசைப்பட்டிருக்கிறார். தற்போது அது நடந்திருக்கிறது. இந்த படத்தை அஜித்தின் விடாமுயற்சி படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. 2026 ஜூலை மாதம் ஷூட்டிங்கை துவங்கி 2027ம் வருடம் மார்ச் மாதம் முடிக்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.
