தமிழ் சினிமாவில் 90கள் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய கெரியரை ஆரம்பித்த மீனா பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்காக விருதையும் வாங்கியுள்ளார். ரஜினி அங்கிள் என்றால் மீனாவைத்தான் நியாபகப்படுத்தும். குழந்தை நட்சத்திரமாக ரஜினியுடன் நடித்த மீனா பிற்காலத்தில் ரஜினிக்கு சிறந்த ஜோடி என்றால் அது மீனாதான் என்றளவுக்கு மாறினார்.
ரஜினி மீனா கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. முத்து, வீரா போன்ற படங்களில் ரஜினியும் மீனாவும் செய்த லூட்டி இருக்கே? ரசிக்கும்படியாக இருந்தது. ஹீரோயினாக என் ராசாவின் மனசிலே படத்தில் அறிமுகமான மீனா அந்தப் படத்தில் அவர் நடிக்கும் போது மீனாவுக்கு 17 வயதுதான் இருக்கும். ஆனால் அந்தப் படத்தில் ஹீரோவாக நடித்த ராஜ்கிரணுக்கு 40 வயது.
இருந்தாலும் அவரின் நடிப்பு அந்தப் படத்தில் பெரியளவில் பேசப்பட்டது. அதன் பிறகுதான் அவர் எஜமான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மாறினார். அந்தப் படம் பெரிய ஹிட். தமிழ் சினிமாவே மீனாவை தலையில் வைத்து கொண்டாட ஆரம்பித்தது. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் என பிற மொழிகளிலும் சூப்பர் ஹிட் நாயகியாக திகழ்ந்து வந்தார் மீனா.
தமிழ் சினிமாவில் இருக்கும் அனைத்து ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். ரஜினி, கமல், அஜித். சத்யராஜ், பிரபு, கார்த்திக், சரத்குமார், முரளி , பார்த்திபன் என எல்லா நடிகர்களுடனும் நடித்தார். மீனா என்றாலே முதலில் நியாபகத்திற்கு வருவது அவருடைய கண்கள்தான். கண்ணழகி மீனா என்றுதான் சொல்வார்கள். இப்படி ஒரு காலத்தில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்த மீனா திருமணத்திற்கு பிறகு கேரக்டர் ரோலில் நடிக்க ஆரம்பித்தார்.

இந்த நிலையில் அவரை போல அவருடைய மகள் நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக தெறி படத்தில் அறிமுகமானார். ஆனால் அதன் பிறகு எந்த தமிழ் படத்திலயும் அவர் காணவில்லை. இப்போது மீனாவும் அவருடைய மகள் நைனினாகவும் சேர்ந்து கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர். அதில் நைனிகா சேலை அணிந்தவாறு போஸ் கொடுத்திருக்கிறார். மீனாவும் நைனிகாவும் அருகருகில் நிற்கும் போது மீனாவை விட அவருடைய மகள் நைனிகா மிகவும் அழகாக காணப்படுகிறார்.
