
Cinema News
KPY Bala: பாலா ஒன்னும் பரம்பரை பணக்காரன் இல்ல… அவரை விசாரிக்கணும்… கிளப்பும் பிரபலம்!
KPY Bala: சின்னத்திரை நடிகர் கேபிஒய் பாலா செய்யும் உதவிகள் குறித்து விசாரிக்க வேண்டும் என பிரபலம் பேசி இருக்கும் விஷயம் வைரலாகி வருகிறது.
தமிழ் நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய சம்பாத்தியத்தின் மூலம் நிறைய உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் சின்னத்திரை நடிகர் கேபிஒய் பாலா தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். இதை அவர் தன்னுடைய சுயநலத்துக்கு செய்வதாக கூறப்பட்டது.
ஆனால் அவர் நான் என்னால் முடிந்த உதவியை செய்கிறேன். ஒரு ரூபாயை கூட இன்னொருவர் கையில் இருந்து வாங்கவில்லை. என்னுடைய கணக்கில் இருந்தே செய்து வருகிறேன். இது சுயநலத்துக்காக இல்லை. என்னால் முடிந்ததையே செய்து வருவதாக கேபிஒய் பாலா தொடர்ந்து கூறி வந்தார்.
அதிலும் சமீபத்திய காலமாக லட்சக்கணக்கில் பாலா தொடர்ந்து செல்வு செய்து வருகிறார். அதற்கான வீடியோக்களையும் இன்ஸ்டா மூலம் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சமீபத்திய மாதமாக ராகவா லாரன்ஸுடனும் சேர்ந்து இதை செய்து வருகிறார்.
இந்நிலையில் கூல் சுரேஷ் திடீரென பாலா குறித்து பேசி இருக்கிறார். அவர் பேசும் போது, இலவச மருத்துவமனை, முடியாதவர்களுக்கு உதவி செய்ய இந்த பாலா பையனுக்கு எங்கு பணம் கிடைக்கிறது? அவன் ராஜ பரம்பரையோ, ஜமீன் பையனோ இல்ல. அவன் பின்னால் யாரோ இருக்காங்க எனப் பேசி இருக்கிறார்.

இந்த விவகாரம் ரசிகர்களிடம் கடுப்பை கிளப்பி இருக்கிறது. பாலாவிடமே இந்த கேள்வியை முன் வைத்த போதே என்னுடைய அக்கவுண்ட்டை காட்டுகிறேன். ஒரு ரூபாயை கூட யாரிடமும் வாங்கவில்லை என்றே கூறி இருந்தார். அதுமட்டுமல்லாமல் சென்னை வெள்ளத்தில் வீடுவீடாக காசு கொடுத்தார்.
அப்போது செய்தியாளர்களிடமே நான் சீட்டு பணத்தை வாங்கிவந்தேன் என்றே கூறினார். இப்படி ஒருவர் கேரக்டரை பேசி வந்த கூல் சுரேஷ் மற்றவர்களுக்கு நல்ல மனசுடன் உதவி செய்யும் பாலாவை அசிங்கமாக பேசுவது அபத்தமான ஒன்றாக மாறி இருக்கிறது.