நடிகர் விஜயை வைத்து பல இயக்குனர்கள் திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகிய மூன்று பேரும் இதில் ஸ்பெஷல்தான். எப்படியெனில் இயக்குனராக வந்து விஜயின் தம்பிகளாக மாறிப்போனவர்கள். விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று படங்களை இயக்கியிருந்தார் அட்லீ. விஜயை எப்போதும் எனது அண்ணன் என்று எல்லா மேடைகளிலும் சொல்பவர்.

அடுத்து விஜயை வைத்து மாஸ்டர், லியோ என இரண்டு படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். அட்லியை போலவே இவரும் விஜய் ரசிகர்களுக்கு சரியான தீனி போட்டவர். விஜய்-அட்லி காம்பினேஷன் எப்படி விஜய் ரசிகர்களுக்கு பிடிக்குமோ அதைவிட அதிகமாக விஜய்-லோகேஷ் கனகராஜ் காம்பினேஷன் விஜய் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதேபோல் விஜயை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கியவர் நெல்சன். இவர்கள் மூவருமே விஜயின் மனதிற்கு நெருக்கமானவர்கள்.
தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்திருக்கிறார் விஜய். இந்த படத்தை இசை வெளியீட்டு விழா நாளை மலேசியாவில் நடக்கவுள்ளது. இதற்காக விஜய், அனிருத், நெல்சன், அட்லி வெளியிட்ட பலரும் மலேசியா சென்றிருக்கிறார்கள்.

இந்நிலையில்தான் அட்லி, நெல்சன், லோகேஷை விட ஹெச்.வினோத்தான் லக்கி என ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள். எப்படியெனில் அட்லிக்கு ஒரே ஒரு ஆடியோ லான்ச் மட்டுமே கிடைத்தது. நெல்சனுக்கு ஆடியோ லான்ச் கிடைக்கவில்லை. அவருக்கு ஒரே ஒரு சின்ன பேட்டி மட்டும் கொடுத்தார் விஜய்.
லோகேஷ் கனகராஜுக்கு ஒரு சின்ன ஆடியோ லான்ச் மற்றும் ஒரு சக்சஸ் மீட் மட்டுமே கிடைத்தது. ஆனால் ஹெச்.வினோத் ஒரு படத்தை மட்டுமே இயக்கியிருந்தாலும் விஜயின் கடைசி படத்தை இயக்கிய இயக்குனர் என்கிற பெயர் கிடைத்திருக்கிறது. மேலும் விஜயை வழியனுப்பும் நிகழ்ச்சியும், ஒரு பிரம்மாண்டமான ஆடியோ லான்ச்சும் அவருக்கு கிடைத்திருக்கிறது’ என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
