">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
EMI கட்டணுமா? வேண்டாமா? – குறுஞ்செய்தி அனுப்பி அதிர்ச்சி கொடுக்கும் வங்கிகள்
கொரோனா பாதிப்பின் காரணமாக தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருபவர்கள் வீட்டில் முடங்கியிருப்பதால் அவர்களுக்கு சம்பளம் எப்படி வழங்கப்படும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. சம்பளத்தை பிடித்தம் செய்யக்கூடாது என அரசு அறிவித்தாலும் எத்தனை நிறுவனங்கள் அதை பின்பற்றும் என்பது தெரியவில்லை.
இதைத்தொடர்ந்து வங்கியில் கடன் பெற்ற பலரும் எப்படி மாத தவனை கட்டுவது என பலரும் கலங்கியிருந்த நிலையில், 3 மாதம் மாதத்தவணை கட்ட வேண்டாம் என சில நாட்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டது. இது மாதத்தவனை கட்டுபவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், தற்போது வரை ‘ நீங்கள் 3 மாதம் மாதத்தவனை கட்ட வேண்டாம்’ என எந்த வங்கிகளிடமிருந்தும் குறுஞ்செய்தியோ, மின்னஞ்சலோ வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படவில்லை.
எனவே, இதில் தொடர்ந்து குழப்பமே நீடித்து வந்த நிலையில், ஹெச்.டி.எஃப்.சி வங்கி மாதத்தவனை தொடர்பான வழக்கமாக அனுப்பும் குறுஞ்செய்தியை வாடிக்கையார்களின் செல்போனுக்கு அனுப்பி வருகிறது. இதில் அதிர்ச்சி அடைந்த பலரும் வங்கியை தொடர்பு கொண்டு கேட்டால், ரிசர்வ் வங்கியிடமிருந்து எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக எந்த அறிக்கையும் வரவில்லை. அப்படி வந்தால் மாதத்தவணை நிறுத்தி வைப்போம் என பதில் தருகிறதாம்.
ரிசர்வ வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஹெச்.டி. எஃப் .சி (HDFC) வங்கியே இப்படி கூறுகிறது எனில், சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வங்கியுள்ள மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் என்ன செய்யப்போகிறார்களோ என்கிற பதட்டம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்த விவகாரத்தில் எழுத்துப்பூர்வமான அறிவிப்பை அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பி மக்களிடையே நிலவும் குழப்பத்தை ரிசர்வ் வங்கி போக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.