நடிகரும் தவெக தலைவருமான விஜய் தனது ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று காலை மலேசியா புறப்பட்டு சென்றார். மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் தேசிய அரங்கில் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறவுள்ளது.
வெறும் ஆடியோ லான்ச்சாக மட்டுமில்லாமல் விஜய் படத்தில் இடம்பெற்ற ஹிட் பாடல்களை பல பாடகர்களும் பாடவுள்ளனர். இசை நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஆடியோ லான்ச் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக அட்லி உள்ளிட பல பிரபலங்கள் மலேசியாவுக்கு சென்றிருக்கிறார்கள். அனேகமாக லோகேஷ் கனகராஜ், நெல்சன் உள்ளிட்ட பலரும் மலேசியா செல்வார்கள் எனத்தெரிகிறது.
இந்த விழாவில் 80 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகமெங்கிலும் உள்ள விஜய் ரசிகர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மலேசியா வந்திருக்கிறார்கள். ஏனெனில், இதுதான் விஜயின் கடைசி ஆடியோ லான்ச்சக பார்க்கப்படுகிறது. ஜனநாயகன் படத்தின் ஹீரோ விஜய் இதில் கலந்து கொள்வதற்காக தனி விமானம் மூலம் இன்று மலேசியா புறப்பட்டு சென்றார்.

அவருக்கு மலேசியாவில் பாரம்பரிய வரவேற்பும் அளிக்கப்பட்டது. அவர் விமான நிலையத்தில் இறங்கி செல்லும் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மலேசியா சென்ற விஜய் ஒரு ஸ்டைலான நீல நிற ஜாக்கெட் ஒன்றை அணிந்திருந்தார். GIORIO ARMANI-யின் Blue Denim Jacket-ன் விலை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 490 ரூபாய் என்பது தெரிய வந்திருக்கிறது. நெட்டிசன்கள் ஆன்லைனில் இதை கண்டுபிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
