80களில் மிகவும் குறைந்த செலவில்தான் படம் எடுத்தார்கள். அதற்கு முக்கிய காரணம் ஹீரோக்களின் சம்பளம் சில லட்சங்களில்தான் இருந்தது. ஆனால் ஹீரோக்களின் சம்பளம் படிப்படியாக உயர்ந்து இப்போது பெரிய நடிகர்களின் சம்பளம் 100 கோடியை தாண்டி விட்டது.
அதுவும் விஜய் 250 கோடி வரை சம்பளம் கேட்பதாக சொல்லப்படுகிறது. தற்போது விஜய் அரசியலுக்கு சென்று விட்ட நிலையில் அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் அஜித் அடுத்து நடிக்கவுள்ள படத்திற்கு 185 கோடி சம்பளம் கேட்டதால் அந்த படம் இன்னமும் டேக் ஆப் ஆகாமல் இருக்கிறது.
குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பின் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ள படத்தில் அஜித் நடிப்பது உறுதியானது. ஆனால் அஜித்துக்கு 185 கோடி சம்பளம் மற்ற நடிகர், நடிகைகள் சம்பளம், படமெடுக்க என படத்தின் மொத்த பட்ஜெட் 300 கோடி வருகிறது. ஆனால் அஜித்துக்கு அவ்வளவு சம்பளம் கொடுக்க முடியாது என கோலிவுட்டின் முக்கிய தயாரிப்பாளர்கள் மறுத்து விட மும்பைக்கு சென்று தயாரிப்பாளர்களை தேடி வருகிறார்கள். இதுவரை தயாரிப்பாளர் உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில், இதுபற்றி உலகம் ஒன்றில் பேசிய வினியோகஸ்தர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் ‘விஜய் சினிமாவிலிருந்து விலகிவிட்டார் என்பதால்தான் அஜித்தின் அடுத்தபட வேலைகள் துவங்காமல் இருக்கிறது என சொல்வதில் உண்மையில்லை. அஜித்தின் புதிய படம் டேக் ஆப் ஆகாமல் இருப்பதற்கு காரணம் அவர் கேட்கும் அதிக சம்பளம்தான்.
300 கோடி பட்ஜெட்டில் படம் எடுக இங்கே ஆள் இல்லை. சன் பிக்சர்ஸ், ஏஜிஎஸ், வேல்ஸ் இண்டர்நேஷனல் போன்ற தயாரிப்பாளர்கள் இங்கே இருக்கிறார்கள். ஆனால் போட்ட பணத்தை எடுக்க முடியாது. ஏனெனில் வியாபாரம் இல்லை. தியேட்டர் மூலமாக வியாபாரம் இல்லை.. ஓடிடி மூலமும் வியாபாரம் இல்லை.. ஆடியோ மூலமும் வியாபாரம் இல்லை’ என பேசியிருக்கிறார்.
