
Cinema News
இளையராஜாவால் வந்த நெருக்கடி!. அஜித்திடம் கெஞ்சும் தயாரிப்பாளர்!.. ஐயோ பாவம்!…
ஆதிக் ரவிச்சந்திரன் – அஜித்குமார் கூட்டணி:
Good Bad Ugly: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் Good Bad Ugly. அந்த படத்திற்கு முன் வெளிவந்த விடாமுயற்சி படம் ரசிகர்களை திருப்திபடுத்தாத நிலையில் குட் பேட் அக்லி அஜித் ரசிகர்களுக்கு ஒரு பெரிய ட்ரீட்டாகவே இருந்தது. அடிப்படையில் அஜித் ரசிகரான ஆதிக் அஜித்தை இதற்கு முன் எந்தெந்த படங்களில் எப்படி எல்லாம் ரசித்தாரோ அந்த எல்லா படங்களின் ரெஃபரன்ஸையும் குட் பேட் அக்லி படத்தில் கொண்டு வந்தார். அதோடு சுலபமாக ஹிட் அடிக்கும் கேங்ஸ்டர் கதையை வைத்து ஹிட் கொடுத்தார் ஆதிக்.

குட் பேட் அக்லியால் வந்த நஷ்டம்:
அதேநேரம் விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களுக்கு லாபம் என்றாலும் படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு 70 கோடி வரை நஷ்டத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்பட்டது.
அதனால்தான் அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் இயக்குவது உறுதியான பின்னரும் அந்த படத்தை தயாரிக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் முன் வரவில்லை. அதோடு, படத்தின் மொத்த பட்ஜெட் 300 கோடி என சொன்னதால் அந்நிறுவனம் பின் வாங்கிவிட்டது.
அஜித் இப்போது கார் ரேஸில் இருக்க ஆதிக் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ள புதிய படத்தின் வேலைகள் இன்னும் துவங்கப்படவில்லை. யார் தயாரிப்பாளர் என்பது முடிவு செய்யவே அவர்களுக்கு பல நாட்கள் ஆகிவிட்டது. ஒரு வழியாக ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் படத்தை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டு இப்போது பட வேலைகள் துவங்கியுள்ளது.

அஜித்துக்கு வந்துள்ள நெருக்கடி:
இந்நிலையில்தான் குட் பேட் அக்லி படம் மூலம் அஜித்துக்கு நெருக்கடி வந்திருக்கிறது. ஏற்கனவே குட் பேட் அக்லியால் எங்களுக்கு 70 கோடி நஷ்டம். மீண்டும் ஒரு படம் பண்ணிக் கொடுங்கள் என மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அஜித்திடம் கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது இளையராஜா நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கால் குட் பேட் அக்லி திரைப்படத்தை Netflix நிறுவனம் தூக்கி விட்டது. இதனாலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு சில கோடிகள் நஷ்டம் என சொல்லப்படுகிறது.
ஒருவேளை ஓடிடி உரிமைக்கான முழுத் தொகையும் நெட் பிளிக்ஸ் நிறுவனம் தயாரிப்பாளருக்கு கொடுத்திருந்தால் கண்டிப்பாக அதில் பாதியை திருப்பி கேட்பார்கள். எனவே அந்த நஷ்டமும் ஏற்கனவே வந்த நஷ்டத்தோடு சேரும் என்பதால் எப்படியும் தயாரிப்பாளருக்கு 100 கோடிக்கும் மேல் நஷ்டம் வரலாம் என்கிறார்கள். எனவே தற்போது இது எல்லாவற்றையும் சொல்லி ‘எங்களுக்கு மீண்டும் கால்ஷீட் கொடுங்கள்’ என அஜித்திடம் பல வகைகளிலும் அழுத்தம் கொடுத்து வருகிறதாம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்.
அஜித் என்ன முடிவெடுக்க போகிறார் என்பது தெரியவில்லை.
AK64 படம் சந்தித்த சிக்கல்கள்:
- அஜித் கேட்ட 180 கோடி சம்பளத்தை கேட்டு அலறிய தயாரிப்பாளர்கள்..
- சன் பிக்சர்ஸ், ஏஜிஎஸ், லைக்கா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் எஸ்கேப்..
- ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்க முன் வந்தார்..
- படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமையை அஜித் சம்பளமாக கேட்டிருக்கிறார்…
- இதுவரை படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை..