ஜெயிலர் 2-வுக்கு பின் ரஜினி நடிக்கப் போகும் புதிய படத்தை யார் இயக்கப் போகிறார் என்கிற கேள்விதான் இப்போது ரசிகர்கள் மனதில் இருக்கிறது.
கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினியின் 173-வது படத்தை சுந்தர்.சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இந்த படத்திலிருந்து சுந்தர்.சி விலகியதால் தற்போது வேறு இயக்குனரை தேடி வருகிறார்கள்.
பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்திருந்ததால் அவரை டிக் அடித்திருக்கிறார்கள். இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி வெளியாகிறது என செய்திகள் கசிந்தது. ஆனால் அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போவது ராம்குமார் பாலகிருஷ்ணன்தானா என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது.

இந்நிலையில்தான் தற்போது ஒரு புது தகவல் வெளியே கசிந்திருக்கிறது. டிராகன் படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து சொன்ன ஒரு காமெடி கதை ரஜினிக்கு பிடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கும் அந்த கதை பிடித்துவிட்டால் ரஜினியின் அடுத்த படத்தை அசோக் மாரிமுத்துவே இயக்க வாய்ப்பிருப்பதாக தற்போது செய்திகள் கசிந்துள்ளது.
அஸ்வத் மாரிமுத்து சிம்புவின் 51வது படத்தை இயக்கவிருக்கிறார் என எற்கனவே அறிவித்து விட்டார்கள். ஒருவேளை ரஜினி பட வாய்ப்பு வந்தால் அந்த படத்தை இயக்கி முடித்துவிட்டு அதன்பின் அவர் சிம்பு படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது