போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை வரலட்சுமி சரத்குமார். சரத்குமாரின் மூத்த மகளான இவர் தமிழ் மட்டுமல்ல தெலுங்கிலும் நம்பர் ஒன் நடிகையாக திகழ்ந்து வருகிறார். தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் இவருக்கு இல்லை என்றாலும் தெலுங்கில் தான் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். ஹீரோயின் ஆக ஒரு சில படங்களில் நடித்து வந்த வரலட்சுமி சரத்குமார் அடுத்தடுத்த படங்களில் வில்லியாகவும் கேரக்டர் ரோல்களிலும் நடித்து மக்களின் அபிமான நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார்.
கேரக்டர் ரோல்களில் மிகவும் பொருத்தமாக நடிக்கக்கூடிய நடிகை வரலட்சுமி சரத்குமார் குறிப்பாக வில்லி கதாபாத்திரத்தில் நடித்து தூள் பண்ணி விடுவார். இவருடைய ஆக்ரோஷமான நடிப்பும் திமிரான நடையும் தான் இவருக்கு மிகப்பெரிய பலம். எந்த கேரக்டர் ரோல் கொடுத்தாலும் அதை திறம்பட நடித்துக் கொடுப்பதில் ஒரு அற்புதமான நடிகை. ஆரம்பத்தில் உடல் பெருத்து காணப்பட்ட இவர் இப்போது உடல் மெலிந்து மிகவும் ஸ்லிம்மாக காணப்படுகிறார்.
லண்டனில் உள்ள பிரபல தொழிலதிபரை இவர் திருமணம் செய்து இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்து நடிப்பார் என அவருடைய கணவர் உத்திரவாதம் கொடுத்தார். அதன்படி தெலுங்கில் இப்போது அவர் படு பிஸியான நடிகையாக திகழ்ந்து வருகிறார். இந்த நிலையில் வரலட்சுமி சரத்குமார் கொடுத்த ஒரு பேட்டி தற்போது வைரலாகி வருகின்றது.
அதாவது அவருக்கு குழந்தை பெற்றுக் கொள்ள ஐடியாவே இல்லை என அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். குழந்தை இருந்தால் தான் ஒரு பெண் தாய் அந்தஸ்தை அடைய முடியுமா? ஏற்கனவே நான் என் தங்கையை நல்ல முறையில் பார்த்து வருகிறேன். என் நண்பர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் இருக்கும்போது எனக்கு இன்னொரு குழந்தை பிறந்தால் அதை என்னால் பார்த்துக் கொள்ள முடியாது. அதனால் இப்போதைக்கு எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள ஐடியாவே இல்லை. எதிர்காலத்தில் வேண்டும் என்றால் அது நடக்கலாம் என கூறி இருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.