
latest news
OTT: படம் மட்டுமில்ல.. இந்த வாரம் பக்கா வெப்சீரிஸ் வெயிட்டிங்… அப்டேட் இதோ!
OTT: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நல்ல டைம் பாஸாக அமைந்து விடுகிறது வார இறுதியில் வெளியாகும் ஓடிடி ரிலீஸ். அந்த வகையில் இந்த வாரம் வெளியாக இருக்கும் திரைப்படங்கள் குறித்த சுவாரஸ்ய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்த வாரம் நிறைய தமிழ் படங்கள் ஓடிடிக்கு வந்துள்ளது. ஜீ5 தமிழ் ஓடிடியில் House Mates வெளியாகி இருக்கிறது. தர்ஷன், காளி வெங்கட் நடிப்பில் படம் பல ஜானரில் வலம் வந்ததால் ஓடிடிக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
கொஞ்சம் விவகாரமான விஷயங்களை வைத்து உருவாக்கிய SsHHh வெப்சீரிஸின் இரண்டாம் பாகம் ஆஹா ஓடிடியில் வெளியாக இருக்கிறது. சிம்ப்ளி சவுத் ஓடிடியில் Sugarless திரைப்படம் வெளியாக இருக்கிறது.

பிரைம் ஓடிடியில் Kanyakumari மற்றும் ஆங்கிலத்தில் GenV சீசன் 2 வெளியாகி இருக்கிறது. சன் நெக்ஸ்ட்டில் மலையாள படமான MaatondaHeluve மற்றும் வசந்த் நடிப்பில் Indra திரைப்படம் வெளியாக இருக்கிறது.
நெட்பிளிக்ஸில் ஆங்கிலத்தில் 28YearsLater, BlackRabbit, HauntedHotel திரைப்படம் வெளியாக இருக்கிறது. மேலும் ஆங்கிலத்தின் NextGenChef சீசன் 1 வெளியாகி இருக்கிறது.
ஹாட்ஸ்டாரில் ஆங்கில படமான Swiped, Sinners மற்றும் இந்தி படமான Chalo Jeete Hain வெளியாகி இருக்கிறது. வெப்சீரிஸை பார்க்கும் போது இந்தியின் The Trial சீசன் 2 மற்றும் மிர்ச்சி செந்தில், ஷபானா நடிப்பில் Police Police வெப்சீரிஸ் வெளியாக இருக்கிறது.