நடிகர் விஜயகாந்துக்கும் ரஜினிக்கும் இடையிலே நல்ல மரியாதை, அன்பு கலந்த ஒரு நட்பு உண்டு என்பது பலருக்கும் தெரியாது. விஜயகாந்த் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டபோன போது ‘அதுதான் ரஜினிகாந்த் என ஒருவர் இருக்கிறாரே.. நீ என்ன விஜயகாந்த்’ என அவரை பலரும் கலாய்த்தார்கள். இதை விஜயகாந்தே பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.
மேலும் ஒரு படத்தில் ரஜினியுடன் இணைந்து விஜயகாந்த் நடிப்பதாக இருந்தது . னால் ரஜினிக்கு அதில் விருப்பமில்லை என சொல்லி விஜயகாந்த் படத்திலிருந்து தூக்கப்பட்டார். இதை ஒரு நேர்காணலில் ரஜினியிடமே விஜயகாந்த் சொன்ன போது ‘அது எனக்கு தெரியவே தெரியாது’ என்று மறுத்தார் ரஜினி. விஜயகாந்த் கேட்டதால் நடிகர் சங்கம் சார்பாக மலேசியாவில் நடந்த கலை நிகழ்ச்சிகளும் ரஜினி கலந்து கொண்டார்.

விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபோது அவரை நேரில் போய் பார்த்தார் ரஜினி. அதே போல் விஜயகாந்த் மரணமடைந்தபோது நேரில் சென்று அவருக்கு அஞ்சலியும் செலுத்தினார். இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்பு ரஜினி கொடுத்த பேட்டி தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்த போது அங்கே என்னை பார்க்க பலரும் கூடி விட்டார்கள். இது மற்றவர்களுக்கு தொந்தரவாக இருந்தது.. அப்போது அங்கு வந்த விஜயகாந்த் என்ன சொன்னார் என்று தெரியவில்லை.. எல்லாரும் போய்விட்டார்கள்.. மேலும் ‘ரஜினி அண்ணன் ரூம் பக்கத்துல எனக்கு ஒரு ரூம் போடுங்க.. நான் பாத்துக்குறேன்’ என்று சொல்லியிருக்கிறார். இதைக் கேள்விப்பட்டதும் என் கண் கலங்கிவிட்டது’ என்று ரஜினி பேசியிருக்கிறார்.
