நடிகர் விஜய் சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலுக்கு வந்துவிட்டார். 33 வருடங்கள் எனக்காக தியேட்டரில் நின்ற ரசிகர்களுக்காக இனிமேல் நான் நிற்கப்போகிறேன் என தெரிவித்திருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி மக்கள் சேவை செய்ய வந்திருக்கிறார்.
அவரைப்பற்றி நன்கு தெரிந்தவர்கள் சொல்வது என்னவெனில் அரசியலுக்கு வர வேண்டும் என்பது விஜய் இப்போது எடுத்த முடிவல்ல. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு அரசியலுக்கு வரவேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு அதிகமாகவே இருந்தது. ஆனால் அதை யாரிடமும் அவர் சொல்லவில்லை. மிகவும் பொறுமையாக சினிமாவில் நடித்து மக்களிடம் பிரபலமாகி மக்கள் மனதில் இடம் பிடித்து 33 வருடங்கள் சினிமாவில் நடித்து அதன் பின்னர் சரியான நேரத்தில் அவர் அரசியலுக்கு வந்திருக்கிறார் என அவரின் நண்பர்கள் சொல்கிறார்கள்.

சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய விஜயின் நண்பர் நடிகர் தாமு கூட இதை உறுதி செய்திருந்தார். பத்ரி படத்தில் நடிக்கும் போதே அவருக்கு அரசியல் ஆர்வம் இருப்பது எனக்கு தெரிந்தது என கூறியிருந்தார்.
இந்நிலையில் ஜனநாயகன் திரைப்படத்தின் இயக்குனர் ஹெ.வினோத் சமீபத்தில் ஒரு வார இதழுக்கு பேட்டி கொடுத்தார்.
அப்போது விஜயின் அரசியல் பிரவேசம் பற்றி பேசி பேசிய அவர் ‘விஜய் அரசியலுக்கு வந்ததில் எந்த ஆச்சரியமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அவர் வராமல் போயிருந்தால்தான் நான் ஆச்சரியப்பட்டிருப்பேன். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஏகப்பட்ட அவமானங்கள், நெருக்கடிகள் எல்லாத்தையும் சந்திச்சிருக்கார்..
ஆனா அந்த தோல்விகளில் இருந்து பாடம் கத்துக்கிட்டு அதற்கான திறனையும், உழைப்பையும் போட்டு மேலே எழுந்து வந்திருக்கிறார். அந்த மாதிரி அரசியலுக்கு வந்திருக்கிறார்.. அரசியல் என்பது சினிமா அளவுக்கு சுலபம் கிடையாது. தினமும் ஒரு சினிமா அடுத்த ரிலீஸ் பண்ற மாதிரி மிகவும் கஷ்டமான வேலை’ என்று பேசியிருக்கிறார்.
