அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ம் வருடம் வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. சென்னையில் உண்மையிலேயே இப்படி ஒரு இடம் இருக்கிறது. அந்த இடத்தை பின்ணியாக வைத்து ஒரு ஹாரர் கதையை எழுதி இருந்தார் இயக்குனர். இந்த படத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மிகவும் குறைவான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட்டடித்தது.
அதன்பின் 9 வருடங்கள் கழித்து டிமான்டி காலனி 2 திரைப்படத்தை இயக்கினார் அஜய் ஞானமுத்து. இந்த படத்தில் அருள்நிதி இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். முதல் பாகத்தில் இடம் பெற்ற காட்சிகளை சரியாக இரண்டாம் பாதியிலும் இணைத்திருந்தனர்.
இந்த படமும் நல்ல வசூலை பெற்றது. எனவே இந்த படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கத் துவங்கினார் அஜய் ஞானமுத்து. தற்போது இந்த படவேலைகள் முடிந்துவிட்டது. விரைவில் படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் டிமாண்டி காலனி 3 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டிருக்கிறது. மிரட்டலான லுக்கில் அருள்நிதி அமர்ந்திருக்கும்படி ஃபோஸ்டரை வடிவைத்திருக்கிறார்கள். இந்த போஸ்டர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
