தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராக போற்றப்பட்டவர் நடிகர் செந்தில். கவுண்டமணியுடன் இணைந்து நகைச்சுவை இரட்டையர் என்று புகழபெற்றவர். 80 மற்றும் 90கள் காலகட்டத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். ஒரு கட்டத்திற்கு பிறகு இருவரும் பிரிந்து நகைச்சுவை காட்சியில் நடித்து வந்தனர். ஏன் படையப்பா படத்தில் ரஜினியுடன் இணைந்து காமெடி செய்தார் செந்தில்.
கார்த்திக், சத்யராஜ் என இவர்களுடன் இணைந்து கவுண்டமணி தனியாக காமெடியில் கலக்கினார். ஆனால் 80கள் காலகட்டத்தில் இவர்கள் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளனர். அதில் குறிப்பாக கரகாட்டக்காரன் படத்தை யாராலும் மறக்க முடியாது. வாழைப்பழக் கதை காமெடி இன்றளவும் ரசிகர்களுக்கு பிடித்தமான காமெடியாக பார்க்கப்படுகிறது.
இப்படி தங்களுடைய துறையில் திறம்பட இருந்து ஜெயித்து ஒரு உயரிய இடத்தில் இருக்கிறார்கள் கவுண்டமணியும் செந்திலும். செந்தில் தன் மகளை மருத்துவராக்கி அழகு பார்த்திருக்கிறார். ஆனால் இவர் சினிமாவில் வருவதற்கு முன் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என்பது யாருக்கு தெரியும்? ஆம். வாய்ப்புகளுக்காக அலைந்து கொண்டிருந்த போது படப்பிடிப்பில் ஆரம்பத்தில் டீ கொடுக்கும் பையனாக இருந்தாராம் செந்தில்.
அவரை அங்கு இருக்கும் பல பேர் டீ வாங்கிட்டு வா, இங்க இந்த வேலைய பாரு. அங்க போ என செந்திலை விரட்டிக் கொண்டே இருப்பார்களாம். இதை பார்த்துக் கொண்டிருந்த பாக்யராஜ் , ‘என்ன இந்த பையனை இப்படி விரட்டுராங்களே’ என்று நினைத்து அவர் இயக்குனரானதும் தன்னுடைய படத்தில் அவருக்கு ஒரு கேரக்டரை கொடுத்திருக்கிறார். அதுவும் அந்தப் படத்தில் நம்பியாரும் நடித்தாராம்.

நம்பியாருடன்லாம் நான் நடிப்பேன்னு நினைக்கவே இல்லைனு சொல்லி பாக்யராஜிடம் வந்து அழுதாராம் செந்தில் . இன்னொரு பக்கம் கவுண்டமணியும் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது ரயில் என்ற படத்தில் கவுண்டமணியை நடிக்க வைக்க பாக்யராஜ் சிபாரிசு செய்திருக்கிறார். ஆனால் பாரதிராஜா கவுண்டமணியை வேண்டவே வேண்டாம் என சொல்ல பாக்யராஜ் வற்புறுத்தலின் பேரில்தான் கவுண்டமணியை அந்தப் படத்தில் பாரதிராஜா நடிக்க வைத்திருக்கிறார். அதன் பிறகு அடுத்தடுத்து நல்ல கேரக்டர் கவுண்டமணிக்கு வந்தது என பாக்யராஜ் கூறினார்.





