vijay

நடிகர் விஜய் கடந்த சில வருடங்களாகவே தனது விஜய் மக்கள் மன்ற இயக்க நிர்வாகிகளை அழைத்து அரசியலில் ஈடுபடுவது பற்றி ஆலோசனை செய்து வந்தார். ஒரு கட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியல்வாதியாக மாறினார். கட்சி ஆரம்பித்த உடனையே விழுப்புரம் விக்கிரவாண்டியில் பிரமாண்டம் பொதுக்கூட்டத்தை நடத்தினார். அதில் ஆவேசமாக பேசிய ஆச்சரியப்படுத்தினார்.

மேலும் மதுரையில் நடந்த மாநாட்டிலும் மிகவும் சிறப்பாக பேசி கைத்தட்டலை வாங்கினார் விஜய். அதே நேரம் அவர் கரூருக்கு சென்றிருந்தபோது அவரைப் பார்க்க நிறைய மக்கள் கூடியதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறார் விஜய். தற்போது இது தொடர்பான சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், விஜயின் ஜனநாயகன் படமும் சென்சார் சிக்கி வெளியாகாமல் இருக்கிறது.

2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என விஜய் நினைக்கிறார். ஆனால் அதற்கான சரியான கூட்டணியை விஜய் இதுவரை அமைக்கவில்லை.. ஏற்கனவே இருக்கும் கட்சிகள் எல்லாம் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து விட 2026 தேர்தலில் விஜய் தனித்து போட்டிடுவார் என்றே தெரிகிறது.

இந்நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. எனவே தமிழகத்தில் இனி விசில் சின்னமும் பிரபலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.