latest news
ஜனநாயகனுக்கு புது ரீலீஸ் தேதி!.. கேவிஎன் பக்கா ஸ்கெட்ச்!. எல்லாம் கோர்ட் கையில இருக்கு!…
விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. பொங்கலை முன்னிட்டு தொடர் விடுமுறைகள் வந்ததால் ஜனவரி 9ம் தேதி இந்த படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டது. ஆனால் சென்சார் பிரச்சினையில் சிக்கியதால் படம் ரிலீஸ் ஆகவில்லை.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பட நிறுவனத்திற்கு ஆதரவாக தனி நீதிபதி பிடி ஆஷா தீர்ப்பளித்தாலும் உடனடியாக தணிக்கை வாரியம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரும் முன்பே தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை ஏற்காத உச்சநீதிமன்றம் ‘இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இருக்கிற்து. அங்கேயே விசாரிக்கலாம்.. ஒருவேளை அங்கே உங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் இங்கு வாருங்கள்’ என்ன சொல்லிவிட்டது.
கடந்த 20ம் தேதி இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்து அன்றே தீர்ப்பும் வெளியாகவிருந்தது. ஆனால் இருதரப்பும் வாதங்களை எடுத்து வைக்க ரொம்ப நேரம் எடுத்துக் கொண்டதால் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. அனேகமாக நாளை வெள்ளிக்கிழமை தீர்ப்பு வெளியாகலாம் என்கிறார்கள். அப்படி இல்லை என்றால் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது. அப்போது தயாரிப்பு நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு வெளியானால் வருகிற 29ம் தேதி படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருக்கிறதாம்.
ஒருவேளை படத்திற்கு எதிராக தீர்ப்பு வந்தால் கண்டிப்பாக தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தை நாடும். அப்படி நடந்தால் ஜனவரியில் ஜனநாயகன் படம் வெளியாக வாய்ப்பில்லை. பிப்ரவரியில்தான் வெளியாகும் என கணிக்கப்படுகிறது.
