நடிகர் சூர்யாவுக்கு கடந்த பல வருடங்களாகவே ஒரு சூப்பர் ஹிட் படம் அமையவில்லை. சூரரைப்போற்று, ஜெய்பீம் ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்கள் என்கிற விமர்சனத்தை பெற்றாலும் அந்த படங்கள் தியேட்டரில் வெளியாகாமால் ஓடிடியில் வெளியானது.
அந்த இரண்டு படங்களுக்கு பின் அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்தது.. பொள்ளாச்சியில் இளம் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் பாண்டியராஜ்.
அதேபோல் சூர்யா அதிக பொருட்செலவில் நடித்து உருவான கங்குவா திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் மண்ணை கவ்வியது. கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடித்து வெளியான ரெட்ரோ படம் மட்டுமே சூர்யாவுக்கு ஓரளவு கை கொடுத்தது. தற்போது சூர்யாவின் 46வது படத்தை லக்கி பாஸ்கர் படத்தை இயக்கிய தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது.
தற்போது சூர்யாவின் 47வது படத்தை மலையாள பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கி வருகிறார். இந்நிலையில்தான் சூர்யாவின் 48வது படம் தொடர்பான செய்தி வெளியே கசிந்திருக்கிறது. எதற்கும் துணிந்தான் படத்தை இயக்கிய பாண்டியராஜுக்கே மீண்டும் வாய்ப்பு கொடுத்திருக்கிறாராம் சூர்யா.
அதற்கு காரணம் பாண்டிராஜ் சொன்ன கதைதான் என்கிறார்கள். பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்து கடைசியாக வெளியான தலைவன் தலைவி திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.





