divya
divya

கடந்த வாரம்தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 9 வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த சீசனில் வெற்றியாளராக திவ்யா கணேஷ் அறிவிக்கப்பட்டார். மக்களின் பெரும் ஆதரவுடன் டைட்டில் வின்னர் ஆனார் திவ்யா. எதையும் வெளிப்படையாக தைரியமாக பேசுவது, யாருக்கு என்ன பிரச்சினை என்றாலும் முதல் ஆளாக குரல் கொடுப்பது, பாரபட்சம் பார்க்காமல் நடந்து கொள்வது என ரசிகர்களின் மனதை கவர்ந்தார் திவ்யா.

இத்தனையும் வைல்டு கார்ட் என்ட்ரியாக நுழைந்தார். இதற்கு முந்தைய சீசனிலும் அர்ச்சனா வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்து டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார். இது திவ்யா இரண்டாவது முறை. ஆரம்பத்தில் பிரஜின், சாண்ட்ரா இவர்களுடன் நெருக்கமாக ஒரு குடும்பமாக இருந்த திவ்யா இடையில் சாண்ட்ரா பண்ண வேலையால்தான் வெகுண்டெழுந்தார்.

தன் பின்னாடி ஜொள்ளு வடித்த திவாகரையும் லெஃப்ட் ஹேண்டில் மேனேஜ் செய்தார். இன்னொரு பக்கம் கம்ருதீன் பார்வதி இவர்களையும் சமாளித்தார். இப்படி ஒரு வீட்டில் எல்லா வித சூழ் நிலைகளையும் சமாளித்தார் திவ்யா. இந்த நிலையில் திவ்யா தன்னுடைய பி.ஆர்-க்கு 40 லட்சம் கொடுத்துதான் வெற்றிபெற்றிருக்கிறார் என்ற ஒரு தகவல் பரவி வருகிறது. இதை பற்றி திவ்யாவிடம் கேட்ட போது அவர் சில விஷயங்களை பகிர்ந்தார்.

அதாவது இன்னமும் நான் வாடகை வீட்டில்தான் இருக்கிறேன். என்னுடைய காருக்கு இஎம்ஐயும் கட்டி வருகிறேன். பிக்பாஸுக்குள் வருவதற்கு முன்பு வரை எந்த வேலையும் இல்லாமல் தான் இருந்தேன். இப்படியிருக்கும் சூழ் நிலையில் நான் எப்படிங்க 40 லட்சம் கொடுக்க முடியும்?

என் வாழ்க்கையில் அந்த 50 லட்சத்தை இப்போதுதான் முதன் முறையாக பார்க்கிறேன். சீரியலில் என் சம்பளமும் அவ்வளவு கிடையாது. பிக்பாஸ் வீட்டிற்குள் நான் என்ன பண்ணேனோ அதைத்தானே வெளியில் காட்டியிருக்கிறார்கள். அதை தவிர்ந்து உள்ளே பண்ணாத விஷயத்தை அவர்கள் காட்டவில்லை. அதோடு ஒவ்வொரு வீடா போய் வலுக்கட்டாயமாக ஒவ்வொருவரின் போனை பிடுங்கி ஓட்டு போடுங்கனா போட்டாங்க? அவ்ளோதாங்க. கடந்து போய்கிட்டே இருக்க வேண்டியதுதான் என திவ்யா பேசியுள்ளார்.