சில திரைப்படங்களை இயக்கியவர் என்றாலும் தேவயானியின் கணவர் என்றால்தான் ராஜகுமாரனை ரசிகர்களுக்கு தெரியும். ஏனெனில், ராஜகுமாரனுக்கு என்று பெரிய அடையாளம் எதுவுமில்லை. நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன், திருமதி தமிழ் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இதில் எல்லாவற்றிலும் தேவயாணிதான் கதாநாயகி. தேவயானி பீக்கில் இருந்தபோது அவரை திருமணம் செய்து கொண்டதால் ராஜகுமாரனுக்கு பட வாய்ப்புகள் குறைந்து போனது. எனவே நடிகராக மாறி ஒரு சில படங்களில் நடித்தார்.
கடந்த சில வருடங்களாகவே ஊடகங்களில் தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார் ராஜகுமாரன். அதில் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். கமல் ஒரு நடிகரே இல்லை.. மகேந்திரன் ஒரு இயக்குனரே இல்லை.. விக்ரமுக்கு நடிக்கவே தெரியாது.. வாரிசு படத்தில் விஜயை விட சரத்குமார்தான் நன்றாக நடித்திருந்தார்.. என்றெல்லாம் பேசி விஜய் ரசிகர்களை கோபப்படுத்தினார்.
அதேபோல் தேர்தலில் விஜய்க்கு டெபாசிட் கூட கிடைக்காது.. விஜய்க்கு அரசியலில் எந்த பயிற்சியும் இல்லை.. தவறான முடிவுகளை அவர் எடுக்கிறார்.. என்றெல்லாம் பேசினார் ராஜகுமாரன். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ‘நான் பிகில் படம் பார்த்தேன். எனக்கு பிடித்திருந்தது.. அதேநேரம் ஷாருக்கான் நடித்த சக்தே இண்டியா படம் போலவே இருந்தது…
தெறி படத்தை பார்க்க சகிக்கல.. ரொம்ப குரூரமாக இருந்தது.. அதுவும் விஜய் சாகுற சீனை எல்லாம் பார்க்க சகிக்கல.. விஜய் கண் கலங்கினாலே என்னால பார்க்க முடியாது.. ஏன்னா விஜய் மேல நமக்கு அப்படி ஒரு ஈர்ப்பு இருக்கு.. அவர் அழுதா அதை பார்க்க முடியாது’ என பேசியிருக்கிறார்.
