ஷூட்டிங் போகக் கூடாது!. ஜெயம் ரவியின் கெரியரை காலி பண்ணும் கென்னிஷா!…

Published on: January 26, 2026
kennisha
---Advertisement---

நடிகர் ஜெயம் ரவிக்கு கடந்த சில வருடங்களாகவே சூப்பர் ஹிட் படம் ஏதும் அமையவில்லை. ஒருபக்கம் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தது, பாடகி கென்னிஷாவோடு அவருக்கு தொடர்பு என்பது உள்ளிட்ட சில சர்ச்சைகளில் சிக்கினார். கென்னிஷாவையும் அவரையும் தொடர்புபடுத்தி பல ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. அதை நிரூபிப்பது போல எங்கு சென்றாலும் கென்னிஷாவோடுதான் செல்கிறார் ஜெயம் ரவி.

மனைவியை பிரிந்த பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பது, சொந்தமாக படங்கள் தயாரிப்பது, படம் இயக்குவது என சினிமாவில் சுறுசுறுப்பானார் ஜெயம் ரவி. இந்நிலையில்தான் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள கராத்தே பாபு படத்தின் டீசர் வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது.. டீசர் வீடியோவை பார்க்கும் போது இந்த படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என்கிற நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.

இந்த படத்தில் இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு பாக்கி இருக்கிறதாம். கடந்த நான்கு மாதங்களாகவே ஜெயம் ரவியை அழைத்தால் ‘இப்போது வருகிறேன்.. அப்போது வருகிறேன்’ என ஏதேதோ காரணம் சொல்லி வருகிறாராம்.. ஆனால் இப்போதுதான் அதற்கான உண்மையான காரணம் தெரிய வந்திருக்கிறது..

இந்த படத்தின் கதாநாயகிக்கும் கென்னிஷாவுக்கும் இடையே ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கென்னிஷாதான் ஜெயம் ரவியை ஷூட்டிங் போகவிடாமல் தடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து ‘இப்போதுதான் சினிமாவில் ஜெயம் ரவி மீண்டும் மேலே வர துவங்கியிருக்கிறார்.. ஆனால் கென்னிஷா அவரின் கெரியரை காலி செய்து விடுவார் போலிருக்கிறது’ என்று திரையுலகில் பேச துவங்கி விட்டார்கள்.