சூடா சாப்பிட்டாதான் அது பிரியாணி!. இல்லனா வேஸ்ட்!.. ஜனநாயகன் பற்றி பேசும் மன்சூர் அலிகான்!..

Published on: January 28, 2026
mansoor
---Advertisement---

நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்சினையில் சிக்கியதால் திட்டமிட்டபடி கடந்த 9ம் தேதி வெளியாகவில்லை. பட ரிலீஸுக்கு 3 நாட்கள் முன்பு படத்தை மீண்டும் மறுத்துணிக்கை செய்ய வேண்டும் என தணிக்கை வாரியம் சொன்னதால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு இப்போது வரை நீடித்து வருகிறது. முதலில் இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பீடி ஆஷா. படத்திற்கு சென்சார் சான்றிதழை கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.. ஆனால் அதை எதிர்த்து தணிக்கை வாரியம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.. அந்த மேல்முறையீட்டு வழக்கில் தனி நீதிபதின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது.

சமீபத்தில் இந்த வழக்க தொடர்பாக தீர்ப்பளித்த நீதிபதிகள் தனி நீதிபதியின் உத்தரவு தடை விதித்ததோடு மீண்டும் இந்த வழக்கை தனி நீதிபதி பிடி ஆஷாவே விசாரிக்க வேண்டும் என கூறிவிட்டனர். மீண்டும் இந்த வழக்கு எப்போது விசாரணைக்கு வந்து, தீர்ப்பு வெளியாகி ஜனநாயக எப்போது வெளியாகும் என்பது யாருக்கும் தெரியவில்லை
.

இந்நிலையில், இதுபற்றி கருத்துள்ள நடிகர் மன்சூர் அலிகான் சூடா சாப்பிட்டால்தான் அது பிரியாணி.. இல்லையெனில் அது வேஸ்ட்.. ஜனநாயகன் படம் வெளியாகாமல் இருப்பது மிகப்பெரிய வேதனை’ என்று தெரிவித்திருக்கிறார்.