rajini-kamal
rajini-kamal

தமிழ் திரையுலகில் முடி சூடா மன்னர்களாக கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கும் மேலாக கோலோச்சி வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். இருவருக்கும் இந்த திரையுலகில் பெரிய மரியாதையும் மதிப்பும் இருந்து வருகிறது. பெரிய ஆளுமைகளாகவே திகழ்ந்து வருகிறார்கள். நடிப்பு என்றால் அது கமல். ஸ்டைல் என்றால் அது ரஜினி. ஆனால் இருவருக்கும் உண்டான ரசிகர் பலம் மிகப்பெரியது.

இந்த நிலையில் ரஜினியை வைத்து கமல் ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார். அந்தப் படத்தை இயக்கப் போவது சிபி சக்கரவர்த்தி என சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. கமலும் சரி ரஜினியும் சரி சமீபகாலமாக ஆக்‌ஷன் சம்பந்தப்பட்ட படங்களிலேயே நடித்து வருவதால் ரஜினியை வைத்து கமல் தயாரிக்க போகும் படமாவது ஒரு லைட் வெயிட் சப்ஜெக்ட்டாக இருக்க வேண்டும் என்று இருவருமே முடிவு செய்தனர்.

அதற்கேற்ப இயக்குனரும் ஹியூமர் சென்ஸ் உள்ள நபராகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினர். அந்த வகையில் சிபி சக்கரவர்த்தியை லாக் செய்துள்ளனர். இந்த நிலையில் ஏற்கனவே ரஜினியும் கமலும் ஒரு புதிய படத்தில் இணைவதாக இருந்தது. ஆரம்பகாலங்களில் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். இருவருக்கும் தனித்தனியாக மார்கெட் உயர்ந்த நிலையில் தனித்தனியாக நடிக்க முடிவு செய்து இப்போது வரை இருவரும் சேர்ந்து நடிக்கவே இல்லை.

ஆனால் மீண்டும் அந்த இருவரையும் இணைக்க பல இயக்குனர்கள் முயற்சி செய்தனர். அது முடியாமல் போனது. அதன் பிறகு இருவருமே ஆசைப்பட்டு இருவரும் சேர்ந்து நடிக்கலாம் என்ற முடிவெடுத்தனர். அந்த வகையில் இருவரையும் இணைக்க போகும் இயக்குனர் பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது. ரஜினியையும் கமலையும் வைத்து நெல்சன் தான் படத்தை இயக்கப் போகிறாராம்.

அந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்திற்கான புரொமோஷன் வீடியோ இன்னும் இருவாரத்திற்குள் வரலாம் என்றும் தெரிகிறது. அதன் பிறகு பிப்ரவரி மாதம் இறுதியில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் சொல்லப்படுகிறது.