vijay

எப்போது விஜய் ரசிகர்கள் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் அதிகமாக பேச துவங்கினார்களோ அப்போது சமூக வலைதளங்கள் நாரிவிட்டது. விஜய்க்கு எதிராக யாரேனும் ஒரு கருத்து சொல்லிவிட்டால் போதும்.. அவர் யாராக இருந்தாலும் சரி.. அவரை சகட்டுமேனிக்கு மிகவும் அசிங்கமாகவும், அவதூராகவும் விஜய் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

குறிப்பாக கடந்த பல வருடங்களாகவே விஜயின் போட்டி நடிகர்களாக பார்க்கப்படும் அஜித், ரஜினி ஆகியோரை விஜய் ரசிகர்கள் மிகவும் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.. ட்ரோல் செய்கிறார்கள்.. அவர்களின் படங்கள் வெளியாகும் போது நெகட்டிவ் விமர்சனங்களை பரப்புகிறார்கள்.. தற்போது அந்த லிஸ்டில் சிவகார்த்திகேயனும் சேர்ந்து விட்டார்.. ஜனநாயகனுக்கு போட்டியாக பராசக்தி படம் வெளியாகிறது என்கிற அறிவிப்பு வெளியானவுடனேயே சிவகார்த்திகேயனுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் பொங்க துவங்கி விட்டனர்.. பராசக்தி படம் வெளியான போது அந்த படத்திற்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்களை அவர்கள் பரப்பினார்கள்.

இப்போது விஜய் அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில் அரசியல் கட்சியினரையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை.. திமுக ஆதரவாளர்கள், திமுக நிர்வாகிகள், விஜயை விமர்சிக்கும் மாற்று கட்சியினர் என யாராக இருந்தாலும் சரி.. டிவிட்டரில் விஜய்க்கு எதிராக கருத்தை தெரிவித்தால் அசிங்க அசிங்கமாக திட்டுகிறார்கள். அவர்கள் வீட்டிற்கு பெண்களையும் கூட அவர்கள் விடுவதில்லை. நடிகரும், திமுக ஆதரவாளருமான போஸ் வெங்கட் சமூக டிவிட்டரில் விஜயை தொடர்ந்து நக்கலடித்து வந்தார். எனவே அவரையும் விஜய் ரசிகர்கள் விட்டுவைக்கவில்லை. அவரை மிகவும் மோசமாக விமர்சித்தார்கள்.

bose venkat
bose venkat

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய போஸ் வெங்கட் ‘விஜயை எதிர்த்து எவன் பேசினாலும் அவங்க குடும்பத்தையே கிழிச்சிடுறானுங்க.. அப்ப இவங்களுக்கெல்லாம் குடும்பமே இல்லையா? தாய், அக்கா, தங்கச்சி யாரும் இல்லையா?.. இது என்னவிதமான மனநிலை?.. இந்த மனநிலையை அவர்களுக்கு ஊட்டியது யார்? நீ எல்லாம் என்ன படிச்சிருக்க?.. என்ன சாப்பிடுற?.. சாப்பாட்டுக்கு பதில் வேற எதுவும் சாப்பிடுறியா?.. எவனாவது இப்படி எல்லாம் எழுதுவானா?.. இவர்கள் எல்லாம் திருந்த வேண்டும்’ என பொங்கியிருக்கிறார்.