மாநகரம், கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ, கூலி ஆகிய திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக மாறியவர் லோகேஷ் கனகராஜ். குறிப்பாக இவர் இயக்கிய கைதி, விக்ரம், மாஸ்டர் போன்ற படங்கள் இவருக்கு அதிகப்படியான ரசிகர்களையும் பெற்று தந்தது. இவரின் படங்களை இளசுகள் எல்.சி.யூ என கொண்டாடினார்கள்.
அதேநேரம் லியோ, கூலி ஆகிய இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றதால் லோகேஷின் இமேஜ் கொஞ்சம் சரிந்து போனது. தற்போது லோகேஷ் கனகராஜ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஒருபக்கம் தெலுங்கு பட நடிகர் புஷ்பா பட புகழ் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரதா கபூர் நடிக்கவுள்ளாராம். படத்தில் இவர் மட்டுமல்ல.. இன்னொரு நடிகையும் இருப்பதாக சொல்லப்படுகிறது.. ஸ்ரதா கபூருக்கு முக்கிய இடம் என்கிறார்கள். இவர் ஏற்கனவே பிரபாஸ் நடித்த சலார் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
