mamitha
mamitha

கடந்தாண்டு தீபாவளி ரிலீஸாக வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படம் டியூட். பிரதீப் ரெங்கநாதன், மமீதா பைஜூ நடிப்பில் இந்தப் படம் இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அதே சமயம் பல தரப்பிலிருந்தும் இந்தப் படத்திற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியது. தமிழ் கலாச்சாரத்தை சீர்குழைக்கும் விதமாக இந்தப் படத்தின் கதை இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால் இன்றைய ஜென்சி கிட்ஸ்கள் இந்தப் படத்தை பெரியளவில் கொண்டாடி தீர்த்தனர். பிரதீப் ரெங்கநாதனுக்கு ஏற்கனவே ரசிகர்கள் அதிகமாக இருப்பதால் படத்தின் கதையெல்லாம் பற்றி அவர்கள் யோசிப்பதே இல்லை. மற்றப்படி ரசிக்குற மாதிரி இருக்கா என்பதை மட்டுமே பார்க்கிறார்கள்.

அப்படித்தான் டியூட் படத்தையும் அவர்கள் பார்த்தனர். இதில் பாக்யராஜ் இந்தப் படத்தின் மீது அவரது விமர்சனத்தை முன் வைத்திருந்தார். கலாச்சாரத்தை கெடுக்கும் விதமாக படத்தில் காட்ட்டப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். ஒரு சீனில் தாலியை கழட்டுவது மாதிரி காட்டியிருப்பார்கள். அதை குறிப்பிட்டே பாக்யராஜ் அவ்வாறு பேசியிருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூட டியூட் படத்தின் பெரிய டிராபேக்கே அந்த பொண்ணுதான் என மமீதா கேரக்டரை பற்றி கூறியிருந்தார். தன்னை விரும்பிய ஒரு பெண்ணின் காதலை ஒரு கட்டத்தில் புரிந்து கொண்டு அந்த பெண்ணை பார்க்க ஓடி வருவார் பிரதீப். தன்னை வேண்டாம் என சொன்ன அந்த கேப்பில் மமீதா வேறொரு ஆணை விரும்பியிருப்பாள்.

திருமணம் ஏற்பாடு செய்யும் போதே இதை அவள் சொல்லியிருக்கலாம். ஆனால் திருமண ஏற்பாடுகள் நடக்கும் போது எனக்கு கன்ஃப்யூசா இருக்கு? நீயா அவனா என யோசிக்கிறது எப்படிப்பட்ட மன நிலை அது? அதுதான் செட்டாகவில்லை. இவன் தான் வேணும்னு ஒரு பெண் நினைத்தால் கடைசி வரை அவன் தான் என இருக்கனும். அதை விட்டு எனக்கு கன்ஃப்யூசா இருக்குனா என்ன அர்த்தம்?

அதுமட்டுமில்லாமல் காமெடியா கொண்டு போறத காமெடியா போகல. சீரியஸா போகுறது காமெடியா போச்சு. அதனால்தான் சென்டிமென்ட் காட்சிகள் எல்லாம் வரும் போது அது சரியா மக்களிடம் கனெக்ட் ஆகல என பாக்யராஜ் கூறியுள்ளார்