விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 9ம் தேதி வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டார். ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பட வியாபாரங்களும் நடந்தது. விஜய் ரசிகர்களும் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் படம் சென்சார் பிரச்சினைகள் சிக்கியதால் அந்த தேதியில் படம் வெளியாகவில்லை.
ரிலீஸ் தேதிக்கு 3 நாட்களுக்கு முன் ஒரு அதிகாரி புகார் கூறியுள்ளார். படத்தை மறுதணிக்கை செய்யவேண்டும் என தணிக்கை வாரியம் சொல்லிவிட்டது. அதன் உயர்நீதிமன்றத்திற்கு போய் தீர்ப்பு கிடைத்து, அதன் பின் மேல்முறையீடு போய் அதற்கு தடை கிடைத்து, அதன்பின் உச்சநீதிமன்றம் போய் தற்போது மீண்டும் வழக்கு உயர் நீதிமன்றத்திற்கே வந்திருக்கிறது.
இந்த வழக்கை மீண்டும் தனி நீதிபதி பிடி ஆஷாவே விசாரிப்பார் என உயர் நீதிமன்ற அமர்வு தெரிவித்திருக்கிறது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
. ஒரு பக்கம் இந்த படத்தை பிப்ரவரி 5ம் தேதி வெளியிடலாம் என தயாரிப்பாளர் யோசித்து வருகிறாராம். ஆனால் அதற்குள் ஜனநாயகன் சென்சார் பிரச்சனை எல்லாம் முடிந்து விடுமா என்பது தெரியவில்லை..
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும்போது தயாரிப்பாளர் தனது வழக்கை வாபஸ் பெறவிருக்கிறார். அதன்பின் படம் மறுதணிக்கைக்கு செல்லும்.. கண்டிப்பாக அதற்கு சில வாரம் அவகாசம் எடுக்கும்.. அது எல்லாம் முடிந்து படம் பிப்ரவரி 5ம் தேதி வெளியாகுமா என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.
