சிங்கிளா இருக்கேன்!.. சினிமாவில் ஹீரோ ஆகணும்!. தெறிக்கவிட்ட வாட்டர்மெலன் ஸ்டார்!..

Published on: January 31, 2026
water melon
---Advertisement---

இன்ஸ்டாகிராம் மூலம் நெட்டிசன்களிடம் பிரபலமானவர் திவாகர். கஜினி திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் சூர்யா கையில் தர்பூசணி சாப்பிட்டுக்கொண்டு அவரின் பாதுகாவலர்களை மிரட்டுவார்.. அதேபோல ஃபர்பாமன்ஸ் செய்கிறேன் என சொல்லி நிறைய வீடியோக்களை வெளியிட்டு வந்த திவாகர் தன்னைத்தானே வாட்டர் மிலன் ஸ்டார் என அழைத்துக் கொண்டார்..

மேலும் கர்ணன் படத்தின் கிளைமாக்ஸில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இறக்கும்போது காட்டும் ரியாக்சனை செய்து காட்டுகிறேன் என சொல்லி நிறைய வீடியோக்களை வெளியிட்டு நெட்டிசன்களை அலறவிட்டவர்தான் இவர். நான் ஒரு மிகச் சிறந்த நடிகர்.. மிகப்பெரிய ஸ்டார்.. உலக அளவில் ஃபேமஸ் என்றும் தன்னைத்தானே சொல்லிக் கொள்பவர் திவாகர். பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியிலும் இவர் கலந்துகொண்டார். அங்கும் நடவடிக்கையை விமர்சனத்திற்கு உள்ளானது.. சிறிது நாட்களிலேயே இவரை வெளியே அனுப்பிவிட்டனர்.

இந்நிலையில், இன்று சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்த வந்த சுதாகர் அங்கு செய்தியாளிடம் பேசிய போது ‘நான் வாட்டர் மிலன் ஸ்டார்.. நடிப்பு அரக்கன்.. எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.. பிக்பாஸ் மூலம் உலக ஃபேமஸ் ஆகியிருக்கிறேன்.. ஆனால் எனக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை.. அதோடு சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

என்னை காமெடி பீஸாக மாற்ற சிலர் முயற்சிக்கிறார்கள்.. என்னை பற்றி நெகட்டிவாக பலரும் ட்ரோல் செய்கிறார்கள்.. அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் நான் ஹீரோவாக அறிமுகமாக வேண்டும் என ஆசைப்படுகிறேன்.. ரொமான்ஸ், காமெடி, ஆக்சன் எல்லாமே நான் செய்வேன்.. எனவே அது பற்றி வேண்டவே திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தேன்’ என்று சொல்லியிருக்கிறார்..