சிறு வயது முதலில் நாடகங்களில் நடிப்பது, பாடுவது என பல வேலைகளையும் செய்தவர் மனோரமா. கருப்பு வெள்ளை கலர் முதல் கலர் சினிமா வரை 5 தலைமுறை நடிகர்களோடு நடித்திருக்கிறார்.. பல மொழிகளில் ஆயிரக்கணக்கான படங்களில் நடித்து சாதனை செய்தவர் இவர்.
சினிமா உலகில் இவரை எல்லோரும் ஆச்சி என அழைத்தார்கள். காமெடி நடிகையாக பல படங்களில் நடித்து ஒரு கட்டத்தில் குணச்சித்திர நடிகையாக மாறினார்.. 90களில் தமிழ் சினிமாவில் அம்மா வேடம் என்றால் அது மனோரமாதான்.. சிரிக்க வைக்கும் அதே மனோரமா கதறி அழுதால் படம் பார்ப்பதற்கு அழுகை வரும்.. அப்படி கதாபாத்திரத்தோடு ஒன்றி நடிப்பார்.
மனோரமா பல ஆயிரக்கணக்கான படங்களில் நடித்திருந்தாலும் பி.வாசு இயக்கிய பெரும்பாலான படங்களில் அம்மா வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும், நடிகன் படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய பி.வாசு ‘சின்னதம்பி படத்தில் ஆச்சி மனோரமாவை விதவையாக நடிக்க வைத்தேன். அவங்களை தூணில் கட்டி பொட்டு பூ வச்சி மன நலம் பாதிக்கப்பட்டவருக்கு கல்யாணம் பண்ணி வைக்குற மாதிரி சீன் எடுத்துட்டு இருந்தோம்..
அப்போது, மனோரமாவின் உதவியாளர் சுகுணா என்கிட்ட வந்து ‘தம்பி உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?.. ஆச்சி மனோரமா கணவர் இன்னைக்கு இறந்துட்டாங்க’ என்று சொன்னார்… அதை கேட்டு எனக்கு பெரிய அதிர்ச்சி.. மனோரமா அவரின் கணவரை பிரிஞ்சி ரொம்ப வருஷம் ஆச்சி.. அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கூட அவங்க நடிக்க வந்தாங்க.. இது சினிமாவில்தான் நடக்கும்.. உண்மை சொன்னா நம்ப மாட்டாங்க’ என்ன சொல்லியிருக்கிறார்.



