ramki
ramki

1987ம் வருடம் முதல் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் ராம்கி.. இவருக்கு நிறைய பெண் ரசிகைகளும் அப்போது உண்டு. துவக்கத்திலிருந்தே காதல் மற்றும் ஆக்சன் கலந்த கதைகளில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். சின்ன பூவே மெல்லப் பேசு படத்தில் அறிமுகமான ராம்கி அதன்பின் ஏராளமான படங்களில் நடித்தார்..

அதில் செந்தூரப்பூவே, பூவிழி ராஜா, ஒரு தொட்டில் சபதம், பெண் புத்தி பின் புத்தி, யோகம் ராஜ யோகம், மருதுபாண்டி, இணைந்த கைகள், வெள்ளையத்தேவன் உள்ளிட்ட பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது.. தற்போது ராம்கி குணச்சித்திர நடிகராக மாறிவிட்டார். இப்போதும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ராம்கி நடிகை ராதிகாவின் தங்கை நிரோஷாவுடன் நிறைய படங்களில் நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.. இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய ராம்கி நிரோஷாவுக்கு தன் மீது காதல் ஏற்பட்ட தருணம் பற்றி பேசியிருக்கிறார்.

இணைந்த கைகள் படத்தில் நடிக்கும் போது நிரோஷாவின் கைய பிடித்துக் கொண்டு ரயில் நிலையத்தில் ஓடி வருவது போல ஒரு காட்சி எடுத்தோம். அப்போது ழே பார்க்காமல் ஓடி வந்ததால் நிரோஷா கீழே விழ பார்த்தாங்க.. முகம் தரையில் மோதி இருக்க வேண்டியது.. டக்கு நான் பிடிச்சு காப்பாத்திட்டேன்.. உடனே அவங்க என்கிட்ட மயங்கிட்டாங்க.. அதோட பார்ட்டி காலி.. அப்பவே லவ் ஆயிடுச்சு’ என்று சொல்லியிருக்கிறார். இப்போது நிரோஷா சீரியல்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது..