தமிழ் சினிமாவில் அண்ணன் தம்பி இருவருமாக சேர்ந்து ஒரு கலக்கு கலக்கி வருகிறார்கள். அவர்கள் வேறு யாரும் இல்லை சூர்யா மற்றும் கார்த்தி. இருவரின் படங்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். கார்த்தியை பொறுத்தவரைக்கும் அவர் சினிமாவில் நுழைந்ததிலிருந்து இப்போது வரை பல புது இயக்குனர்களை அறிமுகம் செய்திருக்கிறார். அவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் புதுமுக இயக்குனர்களை வைத்து தான் அவர் நடித்திருக்கிறார்.
அதைப்போல தேர்ந்தெடுக்கும் கதைகளும் வித்தியாசமாகவே பார்க்கப்படுகிறது. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான வா வாத்தியாரே திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் அந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. பொங்கல் ரிலீஸ் ஆக வெளியான அந்த திரைப்படம் போதிய வசூலை பெற முடியவில்லை. அடுத்து அவருடைய நடிப்பில் சர்தார் 2 திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்த நிலையில் கார்த்தியின் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அவர் ஒரு பாலைவனத்தில் குதிரை மீது ஏறி சவாரி செய்வது மாதிரி அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இதுதான் முதல் முறை, பாலைவனத்தில் குதிரையில் ஏறி பயணம் செய்வது என கேப்ஷனையும் பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் வேள்பாரியில் சூர்யாவை நடிக்க வைப்பதற்கு பதிலாக கார்த்தியை நடிக்க வைக்கலாம் என தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
குதிரையில் ஏறி சவாரி செய்யும் அவருடைய அந்த ஸ்டைல் ரசிகர்களை மிகவும் ஈர்த்துள்ளது. வேள்பாரி படத்தை பொருத்தவரைக்கும் அதில் விக்ரம் நடிப்பது ஓரளவு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சூர்யாவின் பெயரும் அடிபட்டு வருகின்றது. அது ஒரு பேன் இந்தியா திரைப்படமாக உருவாக இருப்பதால் வெவ்வேறு மொழிகளில் இருக்கும் பெரிய நடிகர்கள் நடிப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.
பிரபாஸ் யாஷ் ரன்வீர் சிங் பிரித்திவிராஜ் என பல நடிகர்களின் பெயர்கள் லிஸ்டில் இணைந்து வருகின்றன. இதில் கார்த்தியின் இந்த வீடியோ பெரிய அளவில் வைரலாகி வருவதால் ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தில் சிறப்பான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்ததால் வேள்பாரியில் இவரும் இணையலாமே என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/DUUyRLZEeSN/?utm_source=ig_web_copy_link












