">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இப்ப டேட்டிங்.. விரைவில் கல்யாணம்.. விஷ்னு விஷால் காதலி பேட்டி
நடிகர் விஷ்ணு விஷால் கருத்து வேறுபாடு காரணமாக சில வருடங்களுக்கு முன்பு தனது மனைவியை பிரிந்தார்.
அதன்பின் விளையாட்டு வீராங்கனை ஜூவலா கட்டாவுடன் நெருக்கமாக பழகி வந்தார். அவர்கள் இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியானது. இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி வந்தது. அவ்வபோது இருவரும் டிவிட்டரில் ஒருவரை ஒருவர் கொஞ்சியும் வந்தனர்.
இந்நிலையில், ஜூவாலா சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘நாங்கள் இருவரும் டேட்டிங் செய்வது உண்மைதான். இதில் மறைக்க ஒன்றுமில்லை. நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளோம். தேதி முடிவானதும் விரைவில் தெரிவிப்போம். இதில் மறைக்க எதுவுமில்லை’ என வெளிப்படையாக பேசினார்.