with love

என்னதான் பெரிய நடிகர்கள் நடித்து ஆக்சன் படமாக வெளியாகி 1000 கோடி வசூலை அள்ளினாலும் அந்த படங்கள் மனசுக்கு நெருக்கமாக மாறாது.. ஆனால், மனதை வருடி சென்ற காதல் கதைகள் எப்போதும் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்றிருக்கும். அப்படிப்பட்ட திரைப்படங்கள் அரிதாகவே வரும். அப்படி வெளியாகியிருக்கும் திரைப்படம்தான் வித் லவ்.

டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தை இயக்கி பாராட்டைப் பெற்ற அபிஷன் ஜீவிந்த் With Love படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.. அவருக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்திருக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் மதன் இயக்கியிருக்கிறார். மேலும் ரஜினியின் மகள் சௌந்தர்யா இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.. இந்த திரைப்படம் வருகிற 6ம் தேதி ரிலீஸாகவுள்ளது.அதேநேரம் நேற்று இந்த படத்தின் சிறப்பு காட்சி முக்கிய பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது.. அதை பார்த்த பலரும் சமூகவலைதளங்களில் படத்தை பற்றி பாசிட்டிவாக பதிவிட்டு வருகிறார்கள்.

கதாநாயகியை பெண் பார்ப்பதற்காக அபிஷன் ஜீவிந்த் போகிறார்.. அதன்பின் இருவரும் சந்தித்து பேசிக் கொள்கிறார்கள்.. அப்படி பேசிக்கொள்ளும்போது அவர்களின் பழைய காதல் பற்றி பேச்சு போகிறது.. அதன்பின் அவர்கள் இருவரும் ஒரு முடிவெடுக்கிறார்கள்.. அதன் பின்னர் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை.. அதை அவ்வளவு சுவாரசியமாக இயக்குனர் சொல்லியிருக்கிறார்..

ஒரு சூப்பர் ஃபீல்குட் சினிமா.. அழகி, ஆட்டோகிராப், 96 பட வரிசையில் இந்த படமும் மனதை கவர்கிறது.. கண்டிப்பாக இந்த படம் சூப்பர் ஹிட் என்றெல்லாம் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

சினிமா அப்டேட்டுகளை தொடர்ந்து கொடுத்து வரும் வலைப்பேச்சு யூடியூப் சேனலிலும் இந்த படத்தை பற்றி சிலாகித்து பேசியிருக்கிறார்கள். அபிஷன் ஜீவிந்துக்கும், இயக்குனர் மதனுக்கும் இது முதல் படம் போலவே தெரியவில்லை. அனஸ்வரா ராஜன் அசத்தலாக நடித்திருக்கிறார்.. சின்ன சின்ன முகபாவனைகளிலும் அசத்துகிறார். இந்த படம் பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களின் பழைய காதலை நினைத்துக் கொள்வார்கள்.. குறிப்பாக இந்த படம் பார்க்கும்போது அனைவரும் பள்ளி காலத்திற்கு சென்று விடுவார்கள்..

அறிமுக இயக்குனர் மதன் படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார். பின்னணி இசையும், பாடல்களும் சிறப்பு.. சமீப காலமாகவே மினிமம் பட்ஜெட்டில் வெளியாகும் டூரிஸ்ட் ஃபேமிலி, சிறை வரிசையில் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் படமாக வித் லவ் இருக்கும்’ என்றெல்லாம் அதில் பேசியிருக்கிறார்கள்..