நடிகர் அஜித் கலந்த சில வருடங்களாகவே தொடர்ந்து கார் ரேஸ் விளையாட்டு போட்டியில் ஈடுபட்டு வருகிறார். தனக்கென ஒரு டீமை உருவாக்கி கார் ரேஸ் போட்டியில் அஜித் கலந்து கொண்டு வருகிறார்.
முதலில் துபாயில் கலந்து போட்டியில் அஜித்தின் டீம் கலந்து கொண்டது. அதில் மூன்றாவது பரிசை அஜித்தின் டீம் வென்றது. அதன்பின் ஐரோப்பிய நாடுகள் மற்றும் மலேசியா, அதன் பின் தற்போது துபாய் என பல இடங்களிலும் கார் ரேஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
ஒருபக்கம் கார் ரேஸில் கலந்து கொள்ளும் அஜித்தை பார்க்க பொதுமக்கள் மட்டுமில்லாமல் பிரபலங்கள் பலரும் நேரில் போகிறார்கள். நடிகர் சிம்பு, சிபிராஜ், யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ், நயன்தாரா, விக்னேஷ் சிவன், மாதவன் என பலரும் நேரில் சென்று அஜித்தை சந்தித்தார்கள். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியானது.
இந்நிலையில்தான், மலேசியாவில் கார் ரேஸ் போட்டி நடந்து கொண்டிருந்தபோது அஜித்தை சந்தித்தது தொடர்பாக நடிகர் சிம்பு ஊடகம் ஒன்றில் பேசியிருக்கிறார்..
ஒரு நகைக்கடையை திறப்பு விழாவிற்காக நான் துபாய் சென்றேன். அஜித் சார் கார் ரேஸ் நடைபெறும் இடம் அதன் வழியிலேயே இருந்தது.. நான் அவரை நீண்ட நாட்களாக சந்திக்க திட்டமிட்டிருந்தேன்.. எனவே அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன் அதேநேரம் பந்தயத்தின் போது அவரை தொந்தரவு செய்யவும் நான் விரும்பவில்லை..
அதனால் ‘நான் ஒன்றும் உங்களை சந்திக்கலாமா?’ என அவரிடம் அனுமதி கேட்டேன்.. அவரும் வர சொன்னார்.. அதனாலயே அங்கு சென்று அவரை சந்தித்தேன்.. என்னை பார்த்ததில் அவரும் சந்தோஷப்பட்டார்.. மேலும் அவரது கார் பந்தயம் தொடர்பான சில விஷயங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார்’ என சிம்பு சொல்லியிருக்கிறார்.





