42 வருடங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆகி பட்டி தொட்டி எல்லாம் ஓடி மக்களின் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் உயிருள்ளவரை உஷா. அந்த படத்தை மறுபடியும் ரீ ரிலீஸ் செய்ய இருக்கிறார் டி ராஜேந்திரன். வரும் 13ஆம் தேதி அந்த படத்தை ரீ ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். ஆனால் இன்று தான் அந்த படத்தை மறு வெளியீடு செய்ய நினைத்தார். இதற்கிடையில் சிம்புவின் சிலம்பாட்டம் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆனதால் தன்னுடைய தேதியை தள்ளி வைத்து விட்டார் டி ராஜேந்திரன். இந்த நிலையில் ரீ ரிலீஸ் சம்பந்தமாக ஒரு விழா நடத்தப்பட்டது. அதில் டீ ராஜேந்திரன் செல்வமணி கலைப்புலி எஸ் தானு ராதாரவி நளினி என அனைவரும் கலந்து கொண்டு அவரவர் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
இதில் ராதாரவி பேசியது மிகவும் வேடிக்கையாக இருந்தது. ஆரம்பத்தில் ஒன்று இரண்டு படங்களில் நடித்து வந்த ராதாரவிக்கு படங்கள் வாய்ப்பு சுத்தமாக இல்லாமல் இருந்திருக்கிறது. கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் சும்மாவே இருந்தாராம். சரி அமெரிக்காவில் இருக்கும் தன்னுடைய அக்கா வீட்டிற்கு சென்று விடலாம் என முடிவெடுத்து இருந்த ராதாரவியை திடீரென அழைத்து உயிருள்ளவரை உஷா திரைப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் டி ஆர். அந்தப் படத்தில் நளினிக்கு அண்ணனாக நடித்திருப்பார். அதே சமயம் வில்லனாகவும் நடித்திருப்பார்.
அந்த ஒரு படம் வாழ்க்கையையே மாற்றி விட்டதாக அந்த மேடையில் ராதாரவி கூறினார். அதிலிருந்து தொடர்ந்து எல்லா படங்களிலும் வில்லனாக நடித்து தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தார் ராதாரவி. அதோடு டி ஆர் எப்ப பார்த்தாலும் நேரம் காலம் என சாஸ்திரம் பார்ப்பவர். அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக ஒன்றை சொல்கிறேன். அவருடைய வீட்டிற்கு ஒருமுறை சென்றேன். அப்போது அவர் மாடியில் இருந்தார். நான் கீழே வரும்பொழுது மேலே இருந்த டி ஆரை பார்த்து கையசைத்து வணக்கம் சொன்னேன். அதற்கு டி ஆர் ஒன்றுமே பேசாமல் கையை மட்டும் அசைத்து விட்டு உள்ளே போய்விட்டார்.
எனக்கு அவருடைய அந்த நடவடிக்கை மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது. என்னடா நம்ம வணக்கம் சொல்றோம். அவர் பேசாம போறாரே என நினைத்துக் கொண்டு உள்ளே போனேன். அங்கு வேலையாள் என்னை உள்ளே உட்கார வைத்தார். அப்போது டி ஆர் கீழே இறங்கி வந்தார். நான் கேட்டேன் ஏன் ஒண்ணுமே சொல்லாமல் போயிட்டீங்க என்று கேட்டேன். அதற்கு டி ஆர் அப்படி இல்ல. அந்த நேரத்துல நான் உன் கூட பேசக்கூடாது என கூறினார்.
எனக்கு அதைக் கேட்டதும் ஷாக் ஆகிவிட்டது. இப்படி எல்லாமா நேரம் காலம் பார்ப்பாங்க என நினைத்துக் கொண்டேன் என்று ராதாரவி அந்த மேடையில் கூறினார். அதோடு சிம்புவை பார்க்கும் போதெல்லாம் உன் அப்பா போல நீ வரவே முடியாது என்று ராதாரவி சொல்லிக் கொண்டே இருப்பாராம். அந்த அளவுக்கு காலில் இருந்து கால் பாதம் நுனி வரை கலை கலை கலை இப்படித்தான் டி ஆர் இருக்கிறார். இருந்தாலும் அவருடைய மகன்களையும் கலையில் உள்ளே புகுத்தி விட்டார் என டி ஆர் பற்றி பல விஷயங்களை அந்த மேடையில் ராதாரவி பேசினார்.












