Homelatest newsமன்சூர் அலிகான் திடீர் உண்ணாவிரதம்!.. சென்னையில் பரபரப்பு!…

மன்சூர் அலிகான் திடீர் உண்ணாவிரதம்!.. சென்னையில் பரபரப்பு!…

விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் வில்லனாக நடித்த ரசிகர்களிடம் அறிமுகமானவர் மன்சூர் அலிகான். ஓவர் நைட்டில் ஓபாமா என்பது போல ஒரே பட மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் மன்சூர் அலிகான். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் வில்லனாக நடித்தார். கடந்த சில வருடங்களாக காமெடி கலந்த வில்லன் கதாபத்திரங்களில் நடித்து வருகிறார்.

ஒருபக்கம் அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார். அடிக்கடி செய்திகளை சிந்தித்து நடப்பு அரசியல் பற்றி விமர்சனம் செய்தும் வருகிறார். குறிப்பாக பாஜக ஆட்சியை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்திய ஜனநாயக புலிகள் என்கிற ஒரு அரசியல் கட்சியை துவங்கி நடத்தி வருகிறார்.. அவ்வப்போது தேர்தலிலும் போட்டியிடுவார்..

இந்நிலையில், கீழடி ஆய்வு அறிக்கை பாஜக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்கிற கோரிக்கை வலியுறுத்தி மன்சூர் அலிகான் இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உண்ணாவிரதம் இருக்கிறார். இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது

இந்திய துணை கண்டத்தின் மூத்த நாகரிகமான தமிழர்களின் தொன்மையை பற்றி 5000 வருடங்களுக்கு முந்தைய வாழ்வாதாரத்தை சொல்லும் கீழடி ஆய்வை மத்தியில் ஆளும் பாஜக அரசு இதுவரை வெளியிடாமல் இருக்கிறது. அதை உடனே வெளியிடக் கோரிதான் இந்த உண்ணாவிரத போராட்டத்தை மன்சூர் அலிகான் அறிவித்திருக்கிறார்..

RELATED ARTICLES

Most Popular

Recent Comments