Home latest news ஹாய் பொன்னம்பலம்!.. உதவின்னா என்கிட்ட கேளுங்க!.. சிரஞ்சீவி இஸ் கிரேட்!..

ஹாய் பொன்னம்பலம்!.. உதவின்னா என்கிட்ட கேளுங்க!.. சிரஞ்சீவி இஸ் கிரேட்!..

chiranjeevi

80, 90களில் தமிழ் சினிமாவில் சண்டை காட்சி நடிகர் மற்றும் வில்லனாக அசத்தியவர் பொன்னம்பலம்.. குறிப்பாக விஜயகாந்தின் பல படங்களில் சண்டை காட்சிகளில் நடித்திருக்கிறார். நாட்டாமை உள்ளிட்ட சில படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். அதே நேரம் சில வருடங்களுக்கு முன்பு தனது உடல் நலம் பாதிக்கப்பட்டதாக சொல்லி பலரிடம் உதவி கேட்டார் பொன்னம்பலம்..

அவருக்கு கமல் உள்ளிட்ட சில நடிகர்கள் உதவினார்கள்.. அவர்களில் முக்கியமானவர் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி. அறுவை சிகிச்சைக்கு 45 லட்சம் வரை எனக்கு அவர் செலவு செய்தார் என பொன்னம்பலமே சொல்லியிருந்தார்., மேலும், சமீபத்தில் பேட்டி கொடுத்த பொன்னம்பலம் ‘
என் அண்ணன் எனக்கு துரோகம் செய்தான்.. பீரில் விஷம் கலந்து எனக்கு கொடுத்து விட்டான்.. அதனால் கிட்னி பாதிக்கப்பட்டது.. எனக்கு சூனியமும் வைத்துவிட்டான்’ என்றெல்லாம் அவர் கூறியிருந்தார்.. அதோடு, வீல் சேரில் அமர்ந்து வந்து அதிர்ச்சி கொடுத்தார்.

இந்நிலையில், பொன்னம்பலத்திடம் நலம் விசாரித்த சிரஞ்சீவி ‘பொன்னம்பலம் எப்படி இருக்கீங்க?.. நான் செய்தது ரொம்ப சின்ன உதவி.. ப்ளீஸ் எதையும் சொல்லிக் காட்டாதீங்க.. எதுவா இருந்தாலும் சரி.. உங்களுக்கு எப்போ என்ன உதவி வேணும்னாலும் என்னிடம் கேளுங்க.. நான் செய்கிறேன்.. நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கு எல்லா வகையிலும் உதவி செய்வோம்..

இவ்வளவு வருஷ நட்புல உங்களுக்கு உதவி செய்வது எனக்கு ரொம்ப சந்தோஷம்.. தயவு செய்து உடம்ப பாத்துக்கோங்க.. நீங்க சீக்கிரமா உடல் நலம் தேடி வரணும்னு கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்.. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.. நீங்கள் குணமடைந்து வந்த பிறகு நான் உங்களை வந்து சந்திக்கிறேன்’ என சொல்லியிருக்கிறார்..

Previous articleVijay: விஜய் சொன்ன அந்த வார்த்தை! இங்க வந்து நிக்கிறேன்.. விஜய் ஆண்டனி சொன்ன தகவல்
Next articleமுதல் சீன் நடிச்சவுடனே படம் ஹிட்டுன்னு சொன்ன கவுண்டமணி!.. அட அந்த படமா?!…